தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்று சொன்னாலே அதற்கான ஆரவாரமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருப்பது வழக்கம் தான். ரஜினியின் ‘ஜெய்லர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவரைத் தேடி வந்துகொண்டேதான் இருக்கிறது. இவருடைய ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படமும் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைவர் 171 திரைப்படம் குறித்த புதிய அப்ட்டேட்டுகள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் - ரஜினி கூட்டணி:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான இயக்குனர் லோகேஷ் மற்றும் ரஜினி இணையும் முதல் படம் தான் தலைவர் 171. லோகேஷ் இயக்கவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்திரைபடத்திற்கான படப்பிடிப்னாது வெளிநாட்டிலும், பின்னர் சென்னை உட்பட பல பகுதிகளில் நடக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ரஜினியுடன் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
RCU எவ்வாறு அமையும்:
பொதுவாகவே லோகேஷின் படங்கள் அனைத்தும் LCU என்றக் கான்சப்ட்டில் தான் இதுவரை வெளியானது. ஆனால் தலைவர் 171 திரைப்படமானது RCU என்ற கான்செப்ட்டில், அதாவது ரஜினி சினிமாட்டிக் யூனிவர்ஸாக உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் திரைப்படம் இரண்டு பாகங்களாக அமைந்தாலும், இந்த படத்தின் படப்பிடிப்பானது ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். அதேநேரம் இந்தப் படத்தில் ரஜினி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
திரைப்படம் முழுவதுமாக ஐமேக்ஸ் கேமராவில் ஷூட் செய்யப்பட்டு 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. தலைவர் 171 முதல் பாகம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்த தொடர் அப்டேட்டுகள் கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் தலைவர் 171 குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே வருகிறது.