Vijayakanth and Murali with Vadivelu 
வெள்ளித்திரை

குடித்துவிட்டு ரகளை செய்த வடிவேலு, முரளி… கண்டித்த விஜயகாந்த்… பின் என்ன நடந்தது தெரியுமா?

பாரதி

ஒரு படம் நடிக்கும்போது வடிவேலு மற்றும் முரளி இருவரும் குடித்துவிட்டு ரகளை செய்திருக்கின்றனர். அப்போது விஜயகாந்த் அவர்களை கண்டித்தது குறித்துப் பார்ப்போம்.

விஜயகாந்த் சினிமாவில் ஒரு மரியாதைக்குரிய நபராக வலம் வந்தவர். பின்னர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதிலும் ஏராளமான நன்மைகளை செய்தவர் விஜயகாந்த். இவரின் மறைவிற்கு பின்னரே, இவர் குறித்தான பல நல்ல விஷயங்கள் வெளியே வந்துக்கொண்டிருக்கின்றன. திரைத்துறையில் இவர் செய்த செயல்கள் குறித்து இப்போது பலரும் பேட்டி அளிக்கின்றனர்.

விஜயகாந்த் குறித்து தயாரிப்பாளர் தங்கராஜ் ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது தங்கராஜ் தயாரிப்பில் வடிவேலு, முரளி ஆகியோர் நடிப்பில் வெளியான படம்தான் சுந்தரா ட்ராவல்ஸ். தாஹா இயக்கிய இந்தப் படம் 2002ம் ஆண்டு வெளியானது. கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் நகரும் இந்தப் படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். முரளி மற்றும் வடிவேலின் காமெடி இன்றும் சமூக வலைதளங்களில் ஒரு மீம் மெட்டிரியலாக உள்ளது.

அந்தளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்தப் படத்தில் முரளி மற்றும் வடிவேலு ஆகியோர் அடிக்கடி குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காமல் இருந்திருக்கின்றனர். இதனால், தயாரிப்பாளர் படத்தை கைவிட்டுவிடலாம் என்று எண்ணியிருக்கிறார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் விஜயகாந்திடம் சென்று பேசியிருக்கிறார்.

கோபமடைந்த விஜயகாந்த் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று, முரளி மற்றும் வடிவேலு என இருவரையும் கடுமையாக மிரட்டியுள்ளார். படத்தினை ஒழுங்காக நடித்துக் கொடுக்கவில்லை என்றால், தொலைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதன்பின்னர்தான் இருவரும் எந்த பிரச்னையும் செய்யாமல் நல்லபடியாக படத்தை முடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

இந்த விஷயத்தைதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் பகிர்ந்திருக்கிறார். தற்போது இதுகுறித்தான விஷயங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இப்படி விஜயகாந்த் பற்றி நமக்குத் தெரியாத ஏராளமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவர் செய்த நல்ல காரியங்களைப் பாராட்ட நம்மிடம் வார்த்தைகளும் இல்லை, கேட்க அவரும் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT