அஜித் - த்ரிஷா
அஜித் - த்ரிஷா 
வெள்ளித்திரை

விடாமுயற்சி படத்தில் அஜித் - த்ரிஷா கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?

விஜி

விடாமுயற்சி படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவின் கேரக்டர்கள் பெயர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 'துணிவு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வந்தனர். அஜித் படத்திற்கு அப்டேட் கேட்பதையே ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவர்களின் ஆசைக்காகவே விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள், போட்டோக்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த புகைப்படமும், ஷூட்டிங்கில் உள்ள புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

லைகா நிறுவன தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் 62வது படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து விடா முயற்சி படத்தில் த்ரிஷா அஜித் உடன் இணைந்துள்ளார்.

வெளிநாட்டில் வில்லன் கும்பலிடம் சிக்கிய மனைவி த்ரிஷாவை அஜித் எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் ஒன் லைனாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் என்ற கேரக்டரில் அஜித்தும், கயல் என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடிப்பதாக தற்போது தகவல்கள் பரவியுள்ளன. இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

SCROLL FOR NEXT