விஜய் நடிப்பு குறித்தும் வாரிசு படத்தில் அவர் எப்படி நடித்திருந்தார் என்பது குறித்தும் இயக்குநர் ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.
குட்டீஸ் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர் விஜய். இவரின் இந்த சாதனைப் பயணம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. பெரிய பெரிய கஷ்டங்களை எதிர்க்கொண்ட இவருக்கு எத்தனையோ கதைகள் இருந்திருக்கும். ஒவ்வொருமுறையும் இவர் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள், இப்போது அவரின் கடைசி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் நிலை வந்துள்ளது. சினிமா பயணத்தை இன்னும் ஒரு படத்துடன் முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் விஜய்.
கலை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் விஜய்க்கு வாழ்த்துக்கள் சொல்வதா? அல்லது கோரிக்கை விடுவதா? என்று ரசிகர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். இனி இந்த பிக் ஸ்கிரீனில் தளபதியை எப்போதும் பார்ப்போம் என்ற கேள்விக்கு, பார்க்கவே முடியாது என்ற பதில் வரும் காலம் விரைவில் வரவுள்ளது.
அவரின் சினிமா பயணத்தின் முதல் படம்தான் வெற்றி. இப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். அதேபோல் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார். இப்படத்தில் விஜயின் முதல் சம்பளம் 500 ரூபாய். இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 500ரூபாய்.
விஜய்க்காக உயிரையே கொடுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில் விஜயையே வேஸ்ட் பீஸ் என்று ராஜகுமாரன் பேசியிருக்கிறார். இவர் நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கிருக்கிறார். அதேபோல் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தேவையாணியின் கணவரான ராஜகுமாரன் பேசியதைப் பார்ப்போம்.
“வாரிசு படத்தில் சரத்குமார் மட்டும்தான் அழகா நடிச்சிருந்தார். விஜய் தப்பு தப்பா நடிச்சிருந்தார். அப்பாக்கிட்ட இப்படித்தான் ஆணவமா பண்ணுவியா?.. உங்க அப்பாகிட்ட அப்படி பண்ணுங்க.. அதை சினிமாவில் பண்ணி மத்த பசங்க அவங்க அப்பாகிட்ட பண்ண தூண்டும் கொடூரமான ஆள்தான் விஜய்” என்று பேசியிருக்கிறார்.
ஒரு கதையை எந்தக் கோணத்தில் பார்த்தால் சரியாக இருக்குமோ அப்படி பார்த்திருந்தால் ஒருவேளை நல்ல கதையாக தெரிந்திருக்குமோ? என்னவோ?
ஆனால் வாரிசு படத்தில் இப்படி ஒரு கருத்தை கண்டுபிடித்து சுட்டிக்காட்டியது ரசிகர்களுக்கே புதிதாக இருக்கிறது.