Vijayakanth  
வெள்ளித்திரை

இந்த நடிகரின் வெறியன் தான் விஜயகாந்த்.. ஒரே படத்தை 120 முறை பார்த்த கேப்டன்!

விஜி

கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு அவரது வாழ்க்கை குறித்தும், அவரது பழைய வீடியோக்களும் இணையத்தில் உலாவி வருகின்றன.

விஜயகாந்த் என்ற நபர் ஊர்க்காக உழைத்து கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் குவிந்தனர். இதற்கு முன்பாக எம்.ஜி.ஆருக்கு இது போன்று கூட்டம் குவிந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு நல்ல மனிதனாக விஜயகாந்த் வாழ்ந்ததற்கு இதுவே சாட்சி.

மக்கள் யாரும் விஜயகாந்தை பார்த்ததும் கடந்து செல்லவில்லை. கால் வலிக்க இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்று கொட்டும் மழையில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யும் வரை காத்திருந்து கண்ணீர் வடித்தனர்.

அப்பேர்ப்பட்ட விஜயகாந்தின் பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி ஒரு வீடியோவில், தான் எம்ஜிஆர் ரசிகர் என்று தெரிவித்துள்ளார்.

மதுரையில் விஜயகாந்த் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தபோது, எம்ஜிஆரின் படங்கள் ஒன்று விடாமல் பார்த்துள்ளார். முதலில் விஜயகாந்திற்கு விஜயராஜ் என்றுதான் பெயர் இருந்துள்ளது. பின்னர் சினிமாவுக்காக தனது பெயரை விஜயகாந்த் என மாற்றி படங்களில் நடித்தார். முதலில் சில படங்கள் அவருக்கு கைகொடுக்காத நிலையில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திர சேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் விஜயகாந்திற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

சில வருடங்களுக்கு முன்பாக அவர் அளித்திருந்த பேட்டியொன்றில், எம்ஜிஅர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை படத்தை விஜயகாந்த் 120 முறை பார்த்துள்ளார். இதற்கு அந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள்தான் முக்கிய காரணம். நாடோடி மன்னன், மகாதேவி, அரசிளங்குமாரி படங்களில் வரும் சண்டைக் காட்சிகளும் விஜயகாந்தை அதிகம் கவர்ந்துள்ளன. ஆயிரத்தில் ஒருவன் படத்தை 70 முறை பார்த்த விஜயகாந்த் தான் ஒரு எம்ஜிஆர் ரசிகன் அல்ல, வெறியன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

கவிதை: அவளுக்கென்று ஒரு மனம்!

பித்தப்பை கற்கள் உருவாவதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

SCROLL FOR NEXT