Vishal 34 movie title released 
வெள்ளித்திரை

விஷால் 34 படத்தின் டைட்டில் வெளியானது!

பாரதி

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் அவரது 34 வது படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

தனது 34 வது படத்தில் இயக்குனர் ஹரியுடன் கைக்கோர்கிறார் நடிகர் விஷால். ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் ஏற்கனவே தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரண்டு படத்தில் நடித்திருக்கிறார் . இதில் தாமிரபரணி படம் இன்றும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட படமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் அந்த அளவிற்கு பூஜைப் படம் வரவேற்பை பெறவில்லை என்றே கூற வேண்டும். விஷாலின் இந்த 34வது படத்திற்காக விஷால் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உடல் வடிவை மீண்டும் உடற்பயிற்சி மூலம் பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது இயக்குனர் ஹரிக்கும் அவருடைய கதையில் உள்ள கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாரு திருப்தி அளித்ததாக இருக்கிறது என்று தகவல் வெளியானது. இப்படத்தில் ப்ரியா பவாணி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . இந்த படத்தை Zee studio, Stone bench films மற்றும் Invenio Orgin ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதனையடுத்து ஹரி மற்றும் விஷால் இணையும் இப்படத்தின் அப்டேட் டிசம்பர் 1ம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அப்டேட் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தில் தலைப்பு பற்றியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடி, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் அப்டேட் போஸ்டரில் ஒருபுறம் அருவாலும் மறுபுறம் செதஸ் கோப் கயிற்றில் தொங்குவது போலவும் இருந்தது. இதன்மூலம் இது மருத்துவம் சம்பதப்பட்ட கதை மற்றும் ஒரு ஆக்ஷன் படம் எனத் தெரியவருகிறது.

இதனையடுத்து இன்று மாலை ஐந்து மணிக்கு விஷால் 34 வது படத்திற்கான டீசர் மற்றும் தலைப்பு வெளியானது. இப்படத்திற்கு ‘ரத்னம் ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. டீசரில் ஒரு அய்யனார் கோவில் முன் விஷால் வில்லனின் தலையை வெட்டுவது போல் வெளியாகியுள்ளது. தாமிரபரணி படத்தில் வரும் அதே அய்யனார் கோவில் போல் தான் உள்ளது. மீண்டும் விஷால் கிராமத்துக் கதைகளம் சார்ந்த ஒரு ஆக்ஷன் படத்தில் நடிப்பது ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்டியுள்ளது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT