Uncategorized

5 பரீட்சை பிட் பேப்பர்கள்; நாமக்கல் ஜெராக்ஸ் கடைகளில் பறிமுதல்!

கல்கி

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5 கிலோ அளவுக்கு பரீட்சை பிட் பேப்பர்கள் கன்டறியப் ப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்-டூ மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக, பரீட்சை சமயத்தில் கடைபிடிக்கப் பட வேண்டிய நெறிமுறிகளை பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த  அறிக்கையில் குறிப்பிட்டதாவது;

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கன்டறியப்பட்டால் அந்த மாணவர் தேர்வெழுத நிரந்தர தடை விதிக்கப்படும், தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

-இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பாடபுத்தகத்தைச் சுருக்கி தயாரிக்கப்பட்ட 5 கிலோ பரீட்சை பிட் பேப்பர்கள் அங்குள்ள ஜெராக்ஸ் கடைகளில் கண்டறியப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT