Mammoth Cave 
கலை / கலாச்சாரம்

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

பாரதி

பலரும் சங் டூங் குகைதான் உலகின் நீளமான குகை என்று நினைக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில் உள்ள Mammoth என்ற குகையே உலகின் மிகவும் நீளமான குகையாகும்.

மிகப் பழமையான இந்த மம்மோத் குகையை உலகை சுற்றிப்பார்க்கும் ஆசைக்கொண்ட ஆய்வாளர்கள் கண்டுப்பிடிக்கவில்லை என்றால், இந்த குகை இருந்த இடமே தெரியாமல் இருந்திருக்கும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வரலாற்றிற்கு முந்தய அமெரிக்கர்கள்தான் முதன்முதலில் இந்த குகைக்குள் வாழ்ந்தார்கள்.

இந்த குகையின் நீளம் வரைப்படத்தில் பெரிய அளவில் இடத்தைப் பிடித்திருந்ததைக் கண்டுதான் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில் 1938ம் ஆண்டு  Pete Hanson, Carl Hanson, Leo Hunt, and Claude Hunt ஆகியோர் ஒரு மணி நேரம் நடந்தே ஒரு இடத்தைக் கண்டுபிடித்தனர். அப்போது மம்மோத் குகையை கண்டுபிடிக்கவில்லை.

மம்மோத் குகை இருந்தப் பகுதிக்குள்ளேயே கிரிஸ்டல் குகையை கண்டுபிடித்தனர். பின்னர் க்ரிஸ்டல் குகையைத் தொடர்ந்து மற்றொரு பெயரிடப்படாத குகை இணைந்திருந்தது. அதேபோல் கடந்த 1961ம் ஆண்டு சால்ட் என்ற குகையும் அந்த குகைகளுடன் இணைந்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பயணம் செய்து அங்கிருந்த குகைகள் அனைத்தையும் கண்டுபிடித்தனர். அப்போதுதான் க்ரிஸ்டல், பெயரிடப்படாத அந்த குகை, கோலோஸல் குகை மற்றும் சால்ட் குகை ஆகியவை இணைந்தன. 1972ம் ஆண்டிற்கு முன்னர் அந்த மொத்த குகையையும் Flint Ridge குகை என்று அழைத்தனர். கண்டுபிடிக்கப்பட்ட இந்த நான்கு குகைகளுமே 86.5 மைல்கள் (93.2 கிமீ) நீளத்தைக் கொண்டிருந்தது. அதேபோல் ஏற்கனவே மம்மோத் குகை மட்டும் 57.9 மைல்களை (93.2 கிமீ) நீளத்தைக் கொண்டிருந்தது.

1972ம் ஆண்டு Flint Ridge குகைக்குள் ஆறு பேர் கொண்ட குழு 12 மணி நேரம் பயணம் செய்து, குகையின் முடிவில் ஒரு நதியை எதிர்பார்த்து சென்றனர். ஆனால், அவர்கள் அந்த குகையின் கடைசியில் சென்றபோது ஆறு இல்லை. மம்மோத் குகைதான் இருந்தது. ஏனெனில், அவர்கள்தான் முதல் முறை Flint Ridge குகையை கடந்தவர்கள் ஆவார்கள்.

இந்த மகத்தான கண்டுபிடிப்பே Flint Ridge குகையையும் மம்மோத் குகையையும் இணைத்தது. அந்தவகையில், இந்த மம்மோத் குகையின் மொத்த நீளம் 232.39 கிமீ ஆகும். ஆகையால்தான், மம்மோத் குகை உலகிலேயே மிகவும் நீளமான குகையாக விளங்குகிறது.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT