சீக்கியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த தலைப்பாகை அணியும் பழக்கைத்தைக் கொண்டு வந்து இன்றும் அதனைக் கடைப்பிடித்து வருகிறார்கள். நாம் அதனை அவர்களின் அடையாளமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் அதற்கு எவ்வளவு பெரிய வரலாறும் அர்த்தமும் உள்ளது தெரியுமா?
சீக்கியர்களின் 10வது மன்னராகத் திகழ்ந்த குரு கோபிந்த் சீக் என்பவர் தனது மக்கள் அனைவரையும் தலைமுடியை வெட்டக் கூடாது என்று கட்டளையிட்டார். தலைமுடியை மட்டுமல்ல உடலிலிருக்கும் எந்த முடியையுமே வெட்ட கூடாது என்று கட்டளையிட்டார். ஏனெனில் இறைவன் கொடுத்த உடலை மனிதர்களாகிய நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அதேபோல் காரணமில்லாமல் உடலில் எதையுமே இறைவன் கொடுத்திருக்கமாட்டான் என்பது அவருடைய நம்பிக்கை.
முடியை வெட்டக்கூடாது என்றால் அது நீளமாக வளரும்போது பாதுகாக்க வேண்டுமல்லவா? அதனால்தான் தலைப்பாகை அறிமுகம் செய்யப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது தலைப்பாகை என்பது அப்போது ராஜாக்கள் மட்டுமே அணிய வேண்டும் என்ற விதி இருந்தது. ராஜாக்கள் இந்தத் தலைப்பாகை அணிந்ததற்கான காரணம் போர்களின் போது அம்பு, வாள் போன்ற ஆயுதங்கள் தலைப்பாகையுடன் போவதற்குதான். ஆம்! இது அவர்கள் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியது. அந்தசமயத்தில் இதுதான் சீக்கியர்களின் போர் ரகசியமாகவும் இருந்தது. ஆனால் பிற்பாடு இது ராஜாக்கள் போன்ற பெரிய இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே அணிவது என்ற தவறான அர்த்தத்திற்கு மாறியது. ஆகையால் அங்கு சமத்துவமும் கேள்விக்குறியாக மாறியது.
அந்தநிலையில் மன்னர் குரு கோபிந்த் அந்த விதியை உடைத்து ‘அனைவரும் சமம்’ என்பதை உணர்த்தும்விதமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தலைப்பாகை வழங்க உத்தரவிட்டார். அதிலிருந்து இறை நம்பிக்கை மற்றும் இயற்கையின் அடையாளமாக கருதப்பட்ட தலைப்பாகை பிற்பாடு சமத்துவத்தையும் உணர்த்த ஆரம்பித்தது.
மேலும் சீக்கியர்கள் இந்த தலைப்பாகையால் ஒற்றுமையாகவும் மாறினார்கள். ஒருவருக்கொருவர் தோல் கொடுத்து ஆதரவாக இருக்கும் உணர்வைத் தலைப்பாகைத்தான் அவர்களுக்கு வழங்கியது.
சீக்கிய ராஜாக்கள் எப்படி தலைப்பாகை அணிய ஆரம்பித்தார்கள் தெரியுமா?
குரு கோபிந்த் மக்கள் அனைவரும் தலைப்பாகை அணியும் விதியை கொண்டு வந்தார். ஆனால் ராஜாக்கள் போன்றவர்கள் எப்படி தலைப்பாகை அணிய ஆரம்பித்தார்கள் என்ற சந்தேகம் வருகிறதா? அதற்கு நாம் இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும்.
16வது நூற்றாண்டுகளில் முகலாயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவர்களின் சபையில் இருந்த இந்தியாவின் குறுநில மன்னர்கள், வேலை செய்பவர்கள், ஜமீன்தார்கள் போன்றோரைத் தலைப்பாகை அணிய சொல்லி விதிகள் அமல்படுத்தப்பட்டது. அப்போதுதான் இந்த முறை ஆரம்பமானது. அதிலிருந்து குரு நானாக் உட்பட அனைத்து சீக் குருக்களும் தலைப்பாகை அணிய ஆரம்பித்தார்கள்.
ஐந்தாவது குருவான அர்ஜன் தேவ் “முகலாயர்கள் ஒரு தலைப்பாகைத்தான் பயன்படுத்துவார்கள். நாம் இரட்டிப்பாக பயன்படுத்துவோம்.” என்று கூறினார். அதுமுதல் இன்றுவரை சீக்கியர்கள் இரட்டிப்புடன் அல்லது இரண்டு தலைப்பாகை அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இறை நம்பிக்கை, சமத்துவம், ஒற்றுமை இயற்கை என அனைத்திற்கும் அடையாளமாக இருக்கும் இந்த தலைப்பாகை மேல் உள்ள அவர்களின் காதல் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது.