பெண்களுக்கு சுருட்டை முடியின் மீது இருக்கும் மோகம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் நிறைய பேர் சுருட்டை முடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், அதை எப்படி பராமரிப்பது என்பது பலருக்கு தெரிவதில்லை. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. முடியைத் தேவைப்படும்போது மட்டும் அலச வேண்டும்.
சுருட்டை முடியை அடிக்கடி அலசுவதால், மேலும் சுருட்டையாவது மட்டுமில்லாமல் வறண்டு, பராமரிக்க கடினமாகிவிடும். சுருட்டை முடியை தினமும் அலச வேண்டும் என்ற அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை அலசுவது போதுமானதாகும்.
2.மாய்ஸ்டரைசர்.
சுருட்டை முடி மற்ற முடிகளைக் காட்டிலும் வறண்டு காணப்படும். எனவே, முடியை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள முடியில் கண்டீஷனர் அவ்வபோது பயன்படுத்துவது அவசியமாகும்.
3. சிக்கு எடுத்தல்.
சுருட்டை முடி அடிக்கடி சிக்குப் பிடித்துக்கொள்வதால், அதை நீக்குவதற்காக கண்டீஷனர் போட்டு கைகளை வைத்து மெதுவாக சிக்கை எடுக்க வேண்டும்.
4.சூரியஒளியில் இருந்து பாதுகாத்தல்.
சூரியனிலிருந்து வரும் சூடு மற்றும் புறஊதாக்கதிர் முடியை பாதிக்கக்கூடும். எனவே, சுருட்டை முடியை பாதுகாக்க தொப்பி மற்றும் மாய்ஸ்டரைசர் பயன்படுத்துவது சிறந்தது.
5.தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய பராமரிப்பு.
தூங்குவற்கு முன் முடியை தளர்வாக பிண்ணிக்கொண்டு தூங்குவதால், தலையணையில் அதிகமாக உராய்வு ஏற்பட்டு சுருட்டை முடி சிக்காகும் வாய்ப்பு குறையும்.
6.பெரிய சீப்பை பயன்படுத்தவும்.
சுருட்டை முடி எளிதில் உடையக்கூடிய தன்மையைக்கொண்டது. எனவே, சிக்கு எடுக்க வேண்டுமெனில் குளிக்கும்போது எடுப்பது சிறந்தது. அதுப்போல பெரிய பற்கள் கொண்ட அகலமான சீப்பை பயன்படுத்துவது நல்லதாகும்.
7. சல்பேட் ப்ரீ ஷேம்பூ.
தலைமுடியை சுத்தமாக அலசுலதுதான் தலைமுடி பராமரிப்பின் முதல் படியாகும். முடியில் தூசு, அழுக்கு, எண்ணெய் போன்றவை இல்லாமல் பாரத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே, silicon, sulphates, alcohol போன்ற ரசாயனம் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
8. அதிக வெப்பம் பயன்படுத்த வேண்டாம்.
சுருட்டை முடியில் அதிகமாக வெப்பம் பயன்படுத்தும் போது இயற்கையான அழகை குறைத்துவிடும். எனவே, அதிகமாக வெப்பம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அப்படி பயன்படுத்தியே ஆக வேண்டும் எனில், Heat protectant spray பயன்படுத்துவது முடியைப் பாதுகாக்க உதவும்.
9. குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
தலைக்குளிப்பதற்கு எப்போதும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவும். சுடுத்தண்ணீரை பயன்படுத்தினால், முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்யை அது நீக்கிவிடும். அதுமட்டுமில்லாமல் முடி உடைந்துப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
10. முடியை டிரிம் செய்யவும்.
தலைமுடி வெடித்துப் போயிருந்தால், 6 முதல் 8 வாரத்திற்கு ஒருமுறை வெடித்துப்போன முனையை டிரிம் செய்துக்கொள்வதால், முடி ஆரோக்கியமாக வளரும். ஆலிவ் ஆயில், முட்டை, வினீகர், செம்பருத்தி, வெந்தயம் போன்றவற்றை அரைத்து முடியில் மாஸ்க் போன்று தடவி சிறிது நேரம் கழித்து அலசிவிடுவது முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.