6 things women notice in men..Note it down guys! Image Credits: Real Men Real Style
அழகு / ஃபேஷன்

ஆண்களிடம் பெண்கள் கவனிக்கும் 6 விஷயங்கள்...நோட் பண்ணிக்கோங்க!

நான்சி மலர்

பொதுவாக பெண்கள் ஆண்களை பார்க்கும்போது அவர்களிடம் கவனிக்கக்கூடிய சில விஷயங்கள் உண்டு. அதை வைத்துதான் அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை ஓரளவுக்கு யூகித்துக் கொள்வார்கள். அதைப்பற்றி தெளிவாக இந்தப்பதிவில் காண்போம்.

1.Smile.

பெண்கள் ஆண்களிடம் முதலில் கவனிப்பது அவர்களின் புன்னகையைத்தான். ஆண்கள் புன்னகைக்கும்போது மிகவும் அழகாக இருப்பார்கள். அதனால், ஆண்கள் தங்கள் பற்களை சுத்தமாகவும், சீரான அமைப்பிலும் வைத்துக்கொள்வது என்பது மிகவும் அவசியமாகும். இது மேலும் அவர்களை கவர்ச்சியாகக்காட்டும்.

2.Personality.

ஆண்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள், மதிக்கிறார்கள் என்பதை பொருத்து அவர்களுடைய Personality ஐ தெரிந்துக் கொள்ளலாம். அவர்கள் மற்றவர்களிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை வைத்து அவர்களுடைய குணம் இதுதான் என்று பெண்கள் உறுதி செய்துக்கொள்வார்கள். அதனால், உங்களை சுற்றியுள்ளவர்களை எப்போதும் அன்பாகவே நடத்துங்கள்.

3.Nails.

நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். நீங்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் நகங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம். எனவே, நகங்களை சுத்தமாக பராமரித்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

4.Fragrance.

நீங்கள் பயன்படுத்தும் Fragrance நன்றாக இல்லை யென்றால் மற்றவர்கள் உங்கள் மீது வைக்கும் இம்ப்ரஷனும் நன்றாக இருக்காது. Deodorants ஐ நம்முடைய சருமத்தில் மட்டுமே பயண்படுத்த வேண்டும்.  Perfume ஐ உடைக்கு மேலே ஸ்ப்ரே செய்யாமல் Pulse point ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும். காதுக்கு பின்புறம், மணிக்கட்டு, Elbows ஆகிய இடங்களைத்தான் பல்ஸ் பாயின்ட் என்று கூறுவார்கள். Perfume ஐ ஸ்ப்ரே செய்துவிட்டு போட்டு தேய்க்காமல் Tap பண்ணினால் போதுமானதாகும்.

5.Shoes.

அடுத்து முக்கியமாக சுத்தமான மற்றும் Neat ஆன ஷூக்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்துவது பெண்களிடம் ஒரு மிகப்பெரிய இம்ப்ரஷனை கொடுக்கும்.

6.Dressing sense

பெண்கள் நிச்சயமாக ஆண்களின் Dressing sense ஐ கவனிப்பார்கள். அதனால், நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு போகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு உடை தேர்வு செய்து அணிவது மிகவும் அவசியமாகும். உதாரணத்திற்கு, பிக்னிக்கிற்கு சூட் அணிந்து போகக்கூடாது. திருண நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஷார்ட்ஸ் போட்டு செல்லக்கூடாது. எந்த இடத்திற்கு செல்கிறோமோ அதற்கு ஏற்றவாறு உடையை தேர்வு செய்து அணிந்து செல்வது சிறப்பாகும். இந்த 6 விஷயத்தையும் கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள் பெண்களிடம் நல்ல இம்ப்ரஷனைப் பெறலாம்.

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT