Lip Jewellry
Lip Jewellry 
அழகு / ஃபேஷன்

Lip Jewellry எனப்படும் உதட்டு ஆபரணங்கள்!

கிரி கணபதி

ரு தனிநபர் தன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கலை வடிவமே ஆபரணங்கள். இதுவரை நீங்கள் கை, கால், கழுத்து, காது, மூக்கு போன்ற இடங்களில் அணியும் ஆபரணங்களையே பார்த்திருந்தாலும், உதட்டில் அணியும் நகைகள், இன்றைய ஃபேஷன் உலகில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. எனவே இந்த பதிவில் Lip Jewellery எனப்படும் உதட்டு ஆபரணங்கள் பற்றி ஆராயலாம். 

Lip Jewellery என்றால் என்ன? 

உதட்டை அலங்கரிக்க பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நகைகளே Lip Jewellery எனப்படும். இதில் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டட்கள் முதல் மிகப்பெரிய துளையிட்டு அணியும் ஆபரணங்கள் வரையிலான உதட்டு நகைகள், ஒருவரின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் நாகரீகச் சின்னமாகவே மாறியுள்ளது. இது ஒரு அலங்காரமாக மட்டுமின்றி, தனி நபர்களின் ஆளுமை, விருப்பம் மற்றும் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 

Lip Jewellery-களின் வரலாறு: 

உதட்டில் ஆபரணங்கள் அணியும் வழக்கம் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் பூர்வக் குடிகளின் கலாச்சாரங்களில் ஒன்றாக இருந்தது. மேலும் இது பப்புவா நியூகினியா, டோங்கோன், சூடான் மற்றும் எத்தியோப்பிய மக்களிடையே இருந்த பொதுவான நீண்டகால பழக்க வழக்கமாகவும் இருந்தது.  . 

காது மற்றும் மூக்கு குத்துதல் போன்றவை 5000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே உலகெங்கிலும் உள்ளது. 21ம் நூற்றாண்டின் நாகரிக வளர்ச்சியால் உதடு குத்திக்கொண்டு ஆபரணங்கள் அணிவது மட்டுமில்லாமல், புருவம், தொப்புள், பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் துளையிட்டு ஆபரணங்கள் அணிந்துகொள்வதும் மக்கள் மத்தியில்  பிரபலமடைந்து வந்தது.

Lip Jewellery-களின் வகைகள்:

Lip Studs

Lip Studs: லிப் ஸ்டட் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட உதட்டு ஆபரணமாகும். உதட்டின் ஓரங்களில் அல்லது உதட்டின் நடுவில் துளையிட்டு, இந்த ஆபரணத்தை அணிந்து கொள்ளலாம். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள் சிலர் உதட்டின் ஓரத்திலோ அல்லது புருவத்தின் ஓரத்திலோ ஆணி போல மாட்டியிருப்பார்கள். அதுதான் ஸ்டட்ஸ். உதட்ட அழகை கூட்டிக் காட்ட விரும்புவோருக்கு ஸ்டட்ஸ் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

Lip Rings

Lip Rings: நீங்கள் மிகவும் தைரியமானவர் என்பதை உலகிற்கு வெளிக்காட்ட விரும்பினால் லிப் ரிங்ஸ் தான் அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இவை மென்மையாக உருவாக்கப்பட்ட வளையங்கள் முதல், பல அலங்காரங்களைக் கொண்டு கவனிக்கத்தக்க வட்ட வடிவில் உருவாக்கப்படும் வளையங்கள் வரை பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கின்றன. இது ஒருவரின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் தைரியம் சேர்க்கிறது. 

Labret Piercing

Labret Piercing: லேபரெட் பியர்சிங் என்பது உதட்டின் மையப்பகுதிக்குக் கீழ் குத்திக்கொள்ளும் ஒரு சிறிய ஸ்டட். இந்த அலங்காரம் நம் முகத்திற்கு ஒரு சமச்சீர் தோற்றத்தையும் அழகையும் வழங்குகிறது. தன்னுடைய தனித்துவத்தையும் ரசனையையும் வெளிப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த அணிகலன்.

Monroe Piercing

Monroe Piercing: சரியாக மேல் உதட்டின் நடுப்பகுதியிலிருந்து கொஞ்சம் விலகி ஆபரணங்களை அணிந்து கொண்டால் அதுதான் மன்ரோ பியர்சிங். இந்த வகை அலங்காரம் மர்லின் மன்றோவிடமிருந்து ஈர்க்கப்பட்டதாகும். இது உங்கள் தோற்றத்திற்கு ஒரு விண்டேஜ் லுக்கை சேர்க்கும். 

மேலும் பல விதமான உதட்டு அலங்காரங்கள் இருந்தாலும், இவற்றை நீங்கள் முயற்சிக்கும் போது பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதட்டில் நகைகளை அணிய துளையிடுவதற்கு, தொழில்முறை வல்லுனர்களின் உதவியை நாடுங்கள். அதேபோல துருப்பிடிக்காத உயர்தர நகைகளை தேர்வு செய்வதும் அவசியம். உதட்டு நகைகள் ஒரு சராசரி அலங்காரத்தை விட நுட்பமானது. இது ஒருவருக்கு சுதந்திரத்தையும், தனித்துவமான பூரிப்பையும் ஏற்படுத்துகிறது. 

இத்தகைய உதட்டு அலங்காரம் செய்திருப்பவரை வித்தியாசமாக பார்க்காமல், அவர்களின் உதடுகள் படைப்பாற்றலுக்கான கேன்வாஸாக மாறியிருப்பதை கொஞ்சம் பாராட்டுவோம்.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT