Samantha's designer bag secret.
Samantha's designer bag secret. 
அழகு / ஃபேஷன்

சமந்தாவின் டிசைனர் பேக் ரகசியம்!

கிரி கணபதி

டிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தும் ஆடம்பரம் அல்ல. தற்போதைய பேஷன் உலகில் குறைந்த விலை மதிப்புடன் உள்ள பொருட்களைப் பயன் படுத்துவது அதிகரித்து வருகிறது. இதன் வழியே சமந்தாவும் பயணிக்கிறார். 

தற்போது இணையதளத்தில் ஒரு விஷயம் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது திடீரென ஒரு நபரிடம் சென்று அவர்களின் அவுட் பிட் விலை என்ன என்று விசாரிப்பது. அதில் பெரும்பாலானவர்கள் தான் அணிந்திருக்கும் அவுட் பிட்டின் விலை குறைவாக இருப்பதையே கூறுகின்றனர். யாரோ ஒரு சிலரே அவர்கள் அணிந்திருக்கும் உடை மற்றும் அணிகலன்களின் விலையை அதிகமாகக் கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது குறைந்த விலையிலேயே பார்ப்பதற்கு அழகான உடைகள் இருக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. அதேசமயம் மேல்தட்டு வர்க்க மக்களும் விலை குறைவான உடையை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது. 

அதன் வரிசையில் சமந்தா ருத் பிரபு போன்ற பிரபலமான நபர்கள், விலை குறைவான லூயிஸ் ஒயிட்டன் பையை நியூயார்க்கில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்சென்று, அதை சாதாரணமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதனால் மோனோகிராம் செய்யப்பட்ட இத்தகைய பைகள் இந்தியாவில் பிரபலம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. 

இத்தகைய பைகளை தற்போது பலர் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இந்த கைப்பையை மாட்டிக் கொண்டு படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு நீண்ட கை கொண்ட ராணுவ பச்சை நிற டாப்ஸ், கார்கோ பேண்ட் மற்றும் நியூயார்க் யாங்கிஸ் தொப்பியுடன் அழகாக இருந்தார். 

அதிலும் தன்னுடைய உடைக்கு ஏற்ற நிறத்திலேயே சன் கிளாஸைத் தேர்ந்தெடுத்து, லூஸ் ஹேரிலும் அவர் ஆடையின் காக்கி டோனுக்கு பொருந்துமாறு இருக்கச் செய்தது பார்ப்பதற்கு அட்டகாசமாக இருந்தது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT