செம்பருத்தி ... 
அழகு / ஃபேஷன்

செம்பருத்தி பூக்களின் அழகும் ஆரோக்கிய குணங்களும்!

ஆர்.ஜெயலட்சுமி

செம்பருத்தி பூக்கள் நமக்கு உடல் ஆரோக்கியத்தை குறிப்பாக முடி தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. மயிர் கால்களை வலுவாக வைத்திருக்கவும் நரைமுடியை தடுக்கவும் இந்த செம்பருத்தி பூக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. செம்பருத்தி பூக்களை உலர விட்டு அதை சீயக்காய் பொடியுடன் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கும்போது தலைமுடியில் எந்த பிரச்னையும் வராமல் முடிக்கு பளபளப்பை தருகிறது.

செம்பருத்தி பூக்களை கொண்டு டீ தயாரித்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி இதயத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையவும் இந்த டீ உதவுகிறது. ரத்தம் அழுத்தம் குறைந்து கட்டுக்குள் வருவதற்கும் இந்த டீ பயன்படுகிறது.

செம்பருத்தி பூ டீ....

கர்ப்பப்பை பிரச்னைகளுக்கும் செம்பருத்தி பூக்கள் தீர்வு தருகின்றன. உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் போது செம்பருத்தி இதழ்களை நெய்யில்   வதக்கி சாப்பிடலாம் அல்லது செம்பருத்தி பூக்களை விழுதாக அரைத்து வெறும் வயிற்றில் ஏழு நாளைக்கு சாப்பிட்டாலும் மாதவிடாய் பிரச்சனை சீராகும் அல்லது இந்த பூக்களை நிழலில் உலர்த்தி பவுடர் செய்து காலையிலும் மாலையிலும் ஏழு நாட்கள் சாப்பிட்டாலும் உதிரப்போக்கு பிரச்னை தீர்வாகும்.

செம்பருத்தி இலைகளை அல்லது பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் உஷ்ணம் விலகும். கண் எரிச்சல் கண் நோய்கள், கண் வீக்கம் கண்களில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளை அனைத்தும் தீரும்.

செம்பருத்தியின் பூக்கள் இலைகள் இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தது. தலைமுடி வறட்சி போக்குவதற்கும் தலைமுடி கொட்டுவதை நிறுத்தவும் தலைமுடி அதிகமாக வளரவும் பயன்படுகின்றன வெறும் இலைகளையும் தலைக்கு கண்டிஷனர் போல பயன்படுத்தலாம். இந்த இலையை மைய அரைத்து தலைக்கு தடவினால் இயற்கையான கண்டிஷனர் கிடைத்துவிடும் .பெண்கள்  தலையில் அரிப்பு இருந்தாலும் நீங்கிவிடும் .அல்லது வெறுமனே செம்பருத்தி பூக்களை தலையில் வைத்துக் கொண்டு தூங்கினாலும் இந்த பூக்களின் வாசனைக்கு பேன்கள் ஓடிவிடும்.

செம்பருத்தி இதழ்களை பத்து அல்லது பதினைந்து இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும் அதில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் முகம் பளபளப்பாகும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகான தோற்றத்தை தரும்.

செம்பருத்தி

காய வைத்த செம்பருத்தி இதழ் உடன் ஆவாரம்பூ பாசிப்பயிறு கருவேப்பிலை இலைகளை சேர்த்து பொடியாக்கி தயார் செய்து கொள்ள வேண்டும். தினம் தோறும் குளிப்பதற்கு சோப்பிற்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் எதுவுமே வராது.

செம்பருத்தி பூவே காயவைத்து பொடி செய்து கொண்டு அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

அரை லிட்டர் நல்லெண்ணையை கொதிக்க வைத்து அதில் முப்பது உலர்ந்த செம்பருத்தி பூக்களை போட்டு மிதமான நெருப்பில் அடுப்பை வைத்து காய்ச்ச வேண்டும். ஓசை அடங்கி நல்ல வாசனை வந்ததும் இறக்கி ஒரு நாள் கழித்து வடிகட்ட வேண்டும். அடியில் தங்கியிருக்கும் பூவை எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி காய்ச்சி எண்ணெயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் உடம்பில் தடவி வர சருமம் சுருக்கம் நீங்கி பளபளப்பு பெறும்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT