Tea 
அழகு / ஃபேஷன்

முடி உதிர்வைத் தடுப்பதற்கு நாம் குடிக்க வேண்டிய டீ வகைகள்!

பாரதி

தேநீர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஆகையால், தேநீர் குடித்தே இனி நாம் முடியை வளர்ப்போம். நல்ல ஐடியால…?

தேநீர் முடி வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், முடி கொட்டுவதையும் தடுக்கும். தேநீரில் ஏராளமான ஃப்லேவர்கள் உள்ளன. பொதுவாக இஞ்சி டீ, ஏலக்காய் டீ போன்றவை நம்மைப் புத்துணர்வாக வைத்துக்கொள்ள உதவும். அதேபோல் சில டீக்கள் சளி, காய்ச்சல் போன்ற சமயங்களில் நல்ல மருந்தாக செயல்படும். இப்போது நாம் பார்க்கவுள்ள டீ வகைகள் நமது கூந்தலின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிக்கும்.

ரோஸ்மேரி டீ:

பொதுவாக தலையில் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக சீராக இருந்தாலே, பொடுகு, முடி உதிர்வு போன்ற எந்தப் பிரச்சனைகளுமே வராது. அந்தவகையில் இந்த ரோஸ்மேரி டீயை தினமும் அருந்துவதால், உங்கள் தலையில் ரத்த ஓடம் சீராகி, எந்தப் பிரச்சனைகளுமே வராது.

க்ரீன் டீ:

இப்போது ஏராளமானோர் விரும்பி குடிக்கும் க்ரீன் டீயில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இது இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே முடி கொட்டும் பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் தினமும் க்ரீன் டீயை குடித்து வாருங்கள்.

ஜாஸ்மீன் டீ:

மல்லிகை அல்லது ஜாஸ்மீன் டீயில் முடி ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆகையால், இதனை தினமும் அருந்தி வந்தால், முடி கொட்டும் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

இலவங்கப்பட்ட டீ:

பொதுவாக லவங்கப்பட்டையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. நமது உடலில் உள்ள குளுக்கோஸ் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. 

வெந்தய டீ:

நீர்ச் சத்து இல்லையென்றாலும் முடி உதிர்வு ஏற்படும். வெந்தயத்தில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் இன்சுலின் சுரப்பை தூண்டி முடி உதிர்வை தடுக்கிறது. மேலும் இதனை ஹேர் மாஸ்க் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். வாரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், முடி உதிர்வு பிரச்சனைகள் தீரும்.

இந்த டீ வகைகளில் உங்களுக்குப் பிடித்த டீயை தொடர்ந்து குடித்து வாருங்கள். இல்லையெனில், ஒரு வாரம்விட்டு ஒரு வாரம் வேறு டீயை மாற்றிக் குடியுங்கள்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT