Head louse 
அழகு / ஃபேஷன்

ஒரே நாளில் பேன் தொல்லை நீங்க இந்த ரெமடியை ட்ரை பண்ணுங்க!

சங்கீதா

நீளமான கூந்தல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? ஒரு சில பெண்களுக்கு நீளமான, அடர்த்தியான கூந்தல் வைத்துக்கொள்ள பிடிக்கும். ஒரு சில பெண்களுக்கு குறைவான கூந்தல் வைத்துக்கொள்ள பிடிக்கும். ஆனால், அந்த முடியும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

நாம் பார்த்து பார்த்து வளர்க்கும் இந்த கூந்தலில் பெரிய தொல்லையாக இருப்பது என்னவென்று பார்த்தால் பேன் தான். பேன் உள்ளவர்களுக்கு ஒரு வேலையை சரியாக பார்க்க முடியாது. குறிப்பாக பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு இந்த பேன் தொல்லை இருக்கும். அதனால் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். வேலை பார்க்கும் இடத்தில் பேன் தொல்லையால் மற்றவர்கள் முன்பு தலையை சொறிய கூட முடியாது. 

மேலும் தலை குளித்துவிட்டு நமக்கு பிடித்தது போல ஹேர் ஸ்டைல் செய்ய முடியாது. தலையில் உள்ள ஈறு கூந்தலில் அசிங்கமாக தெரியும். ஒரு சிலருக்கு இந்த பேன் பிரச்சனையால் தலையில் புண் ஏற்படும். அதனால் தலை எரிச்சலுடன் காணப்படும். செயற்கையாக கிடைக்கும் பேன் மருந்துகளை வாங்கி பயன்படுத்தினால் அது கூடுதல் எரிச்சல் கொடுக்கும். மேலும் கூந்தல் உதிர்வதற்கு வாய்ப்புண்டு. நம் தலையில் உள்ள பேன் பிரச்சனையை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என காண்போம்.

எவ்வாறு குணப்படுத்தலாம்? 

ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த விழுதை வேப்ப எண்ணெயுடன் கலந்து தலை முடியின் அடியில் நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு அதன்பிறகு தலை குளித்தால் பேன் இறந்துவிடும்.

துளசியை பயன்படுத்தலாம். துளசி இயற்கையாகவே பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வந்தால் பேன் தொல்லை நீங்கி விடும். மேலும் துளசியை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கி விடும்.

வேப்ப இலையை அரைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து அதனை கூந்தலில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து தலை குளிக்க வேண்டும். இதனால் பேன் தொல்லை நீங்கி விடும்.

வேப்பம் பூவை வாணலியில் போட்டு லேசாக வதக்க வேண்டும். அதனை தேங்காய் எண்ணெய் சேர்த்து தினமும் தேய்த்து வரலாம். இதனால் தலையில்  மீண்டும் பேன் வராது.

மருதாணி விதைகளை அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வசம்பு தூளை சேர்த்து இரண்டையும் தலையில் தேய்த்து ஊறவைத்த பிறகு தலை குளித்தால் தலையில் ஏற்பட்டுள்ள புண், அரிப்பு நீங்கும்.

குப்பை மேனி இலையை பறித்து அதன் சாறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், பேன் அரிப்பால் ஏற்பட்ட புண் குணமாகிவிடும். மேலும் தலையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சையில் இருந்து பாதுகாக்கும்.

முக்கிய குறிப்பு : பேன் தொல்லை வராமல் இருக்க வேண்டும் என்றால், ஒருவர் பயன்படுத்திய தொப்பி, சீப்பு, தலையணை, தலை துவட்டும் துண்டு போன்றவற்றை பயன்படுத்த கூடாது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT