Fruit pack
Fruit pack Image credit - pixabay.com
அழகு / ஃபேஷன்

வீட்டிலிருந்தே அழகாக்க உதவும் பழ பேக் (Fruit pack) வகைகள்!

மகாலட்சுமி சுப்பிரமணியன்

மலா ஆரஞ்சு சாறுடன் இரண்டு மூன்று துளி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு ‌மெல்லிய காட்டன் துணியால் முகத்தில் தொட்டு ஒற்றி எடுக்க முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மறைவதுடன் நல்ல கலரையும், பளபளப்பையும் தரும்.

வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் இவற்றை சிறு துண்டுகளாக வெட்டி அதை சிறு மஸ்லின் துணியில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் இதை எடுத்து கண்களுக்கு மேல் சிறிது நேரம் வைக்க புத்துணர்வைத் தரும்.

ர்பூசணி ஜுஸை ஃப்ரிட்ஜில் வைத்து கட்டிகளாக ஆனதும் அதை எடுத்து முகம், கை, கால்களில் ஒற்றி எடுக்க சொரசொரப்பு நீங்கி சருமம் மிருதுவாகும். நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

ரஞ்சு பழத்தின் தோலை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வெந்தயத்தூளை சேர்த்து தலையை அலச பேன், பொடுகு, அரிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.

ரை டீஸ்பூன் ஜாதிக்காய் பவுடர், மாசிக்காய் பவுடர் அரை டீஸ்பூன் எடுத்து அன்னாசி பழச்சாற்றில் கலந்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ சருமம் பளிச்சென்று இருக்கும்.

Fruit pack

மாதுளை ஜுஸுடன் வெட்டி வேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பருக்களின்றி பளிச்சிடும்.

கொட்டை எடுத்த பேரீட்சையை அரைத்து தர்பூசணி சாறுடன் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ டல்லான முகம் பொலிவாகும்.

ப்பாளி பழத்தை மசித்துக் கொண்டு அதை முகம், கழுத்து பகுதிகளில் தடவி கழுவிட கருமை நீங்கி முகம், சருமம் பளிச்சென்று இருக்கும்.

இவ்வாறு பல பழங்களை பேக் காக வீட்டிலிருந்தே போட்டு அழகை பாதுகாக்கலாம்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT