ரெட்டினாய்ட் (Retinoid) என்பது ஒரு குரூப் ஆப் விட்டமின் காம்போன்ட்ஸ் ஆகும். ரெட்டினாய்ட் கண்டுப்பிடித்து 60 வருடங்கள் ஆகிறது. அன்றிலிருந்து இன்றுவரை Anti ageing க்கு சிறந்த மருந்தாக இதுவே பயன்படுகிறது.
நம்முடைய சருமத்தின் மேலே இருக்கும் லேயரை எப்பிடெர்மிஸ் (Epidermis) என்று சொல்கிறோம். இதில் லிவ்விங் லேயர், டெட் லேயர் என இரண்டு லேயர்கள் உள்ளன. லிவிங் லேயரில் இருந்து செல்கள் உருவாகி மேலே வரும், பிறகு டெட் லேயருக்கு வந்ததும் உரிந்து கீழே விழுந்துவிடும். ரெட்டினாய்ட் லிவிங் லேயரில் செல்கள் உருவாவதை அதிகப்படுத்தி விடும். இதனால் Skin barrier பலமாகும். இப்படி நடக்கும் போது, சருமத்திலிருந்து ஈரப்பதம் இழக்கப்படுவதும் தடுக்கப்படும். இதனால் சருமம் நன்றாக பொலிவடையும்.
ரெட்டினாய்ட் நம்முடைய சருமத்தில் கொலாஜென் பாதிப்படைவதை தடுத்து நிறைய கொலாஜெனை உருவாக்கும். ரெட்டினாய்ட் ஆன்டி ஆக்னேவாக செயல்படும். எண்ணெய் உருவாக்கக்கூடிய செல்களுடைய அளவை குறைக்கும். ரெட்டினாய்ட் சருமத்தில் உள்ள பிக்மெண்டேஷன் உருவாக்கக்கூடிய செல்களை தடுத்து பிக்மெண்டேஷன் வருவதை குறைக்கிறது.
இந்த ரெட்டினாய்ட்டால் பல நன்மைகள் இருக்கிறது. ஆன்டி ஏஜ்ஜிங், ஆன்டி பிக்மெண்டேஷன், முகச்சுருக்கம், கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது, சருமத்தில் பொலிவு, பளபளப்பை கூட்டுகிறது. கர்ப்பகாலத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக ரெட்டினாய்ட்ஸை பயன்படுத்தக் கூடாது. வறட்சி, அரிப்பு, தோல் உரிதல் போன்றவை ரெட்டினாய்ட்ஸை பயன்படுத்தும் போது நிச்சயம் ஏற்படும். ரெட்டினாய்ட் கண்டிப்பாக மருத்துவரால் Prescribe செய்து பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதால் கண்டிப்பாக தோல்நோய் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
ரெட்டினால் (Retinol) 0.5% முதல் 1% வரை Concentration இருக்கும். இந்த ரெட்டினாலை சருமத்தில் போடும்போது இது சருமத்திற்குள் சென்று ரெட்டினாய்ட்டாக மாறும். ரெட்டினாய்ட்டை இரவில் பயன்படுத்துவதே சிறந்தது. பகலில் சருமத்தில் பயன்படுத்திய பிறகு சூரிய ஒளியில் வெளியே செல்லும் போது ரெட்டினாய்ட் Inactivate ஆகிவிடும். அதனால் இதை இரவில் போடுவதே சிறந்தது. ரெட்டினாய்ட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க இதை மாய்ஸ்டரைசரோடு கலந்து போடலாம். இதற்கு Sandwich method பயன்படுத்தலாம். அதாவது முதலில் மாய்ஸ்டரைசர் பிறகு ரெட்டினாய்ட் அதன் பிறகு மறுபடியும் மாய்ஸ்டரைசரை சருமத்தில் பயன்படுத்தலாம்.
ரெட்டினாய்ட் உடைய பலன் கிடைக்க வேண்டும் எனில் இதை எவ்வளவு காலம் பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். இதை குறைந்தது 4 முதல் 6 வாரம் பயன்படுத்தினால்தான் சருமத்தில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம். எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக எந்த க்ரீமை பயன்படுத்துவதற்கு முன்பும் ஒரு நல்ல தோல் மருத்துவரை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்தது.