Insects 
பசுமை / சுற்றுச்சூழல்

மனிதர்கள் தொட்டால் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் உயிரினம்!

பாரதி

மனிதர்களைக் கண்டு ஓடும் உயிரினங்களும், மனிதர்களை ஓடவைக்கும் உயிரினங்களும் ஏராளம். அந்தவகையில், மனிதர்கள் தொட்டால் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் உயிரினத்தைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பொதுவாக பூச்சி, ஊர்வன ஆகியவற்றைத் தெரியாமல் தொட்டுவிட்டாலே, சிலர் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்துக்கொள்வார்கள். மேலும் சிலர் விலங்குகளை தொட்டால், உடனே சோப்புப் போட்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்வார்கள். நீங்கள் ஒன்று யோசித்ததுண்டா? நமக்கு விலங்குகளின் மொழி தெரியாததால், அவர்களை நாம் வாயில்லா ஜீவன் என்று அழைக்கிறோம். இதனை அந்த விலங்குகளின் பக்கம் இருந்து யோசித்துப் பாருங்களேன். நம்முடைய மொழி அவர்களுக்கு நாம் கத்துவது போலத்தானே இருக்கும். அப்போது நாம் ஒரு ஊமையான உயிரினம் என்றுதானே விலங்குகளுக்குத் தோன்றும்.

இப்போது இதனை ஏன் குறிப்பிட்டோம் என்றால், நாம் விலங்குகளைத் தொடுவது பிடிக்காமல், நம்மை சுத்தம் செய்கிறோம். நம்மைத் தொடுவதற்கு பிடிக்காமல், விலங்குகளும் சுத்தம் செய்துக்கொள்ளலாம் அல்லவா?

அனைத்து விலங்குகளும், உயிரினங்களும் சுத்தம் செய்துக்கொள்ளுமா என்பது தெரியாது? ஆனால், இந்த உயிரினம் சுத்தம் செய்துக்கொள்ளும்.

இரவு நேரங்களில் மட்டும் எட்டிப் பார்க்கும் தந்திரக்காரன், மூளை முடக்குகளிலெல்லாம் ஒழிந்துக்கொள்ளும் திருடன், அனைத்து வீடுகளுக்கும் வரும் அழையா விருந்தாளி அவன், அவனே கரப்பான்பூச்சி.

ஆம்! நம்மைக் கண்டால் தலை தெறிக்க ஓடும் கரப்பான்பூச்சி, நாம் அதனைக் கொன்றுவிடுவோம் என்ற பயத்தோடு மட்டும் ஓடுவது கிடையாது, எங்கே நாம் அதனை தொட்டுவிடுவோமோ என்ற பயத்திலும்தான் ஓடுகிறது.

ஒருவேளை நாம் தெரியாமல் அதனைத் தொட்டுவிட்டால்கூட, முகத்தை சுழித்துக்கொண்டு, எதோ தீண்ட தகாதவர்கள் தொட்டதுபோல தன்னை சுத்தம் செய்துக்கொள்ளுமாம். நமக்கு எப்படி அருவருப்பாக இருக்குமோ? அதேபோல்தான், அந்த கரப்பான் பூச்சிகளுக்கு அருவருப்பாக இருக்கும். இத்தனைக்கும் அவைகளுக்கு நோய்த்தொற்றுக் கூட ஏற்படுவதில்லை.  

பாருங்களேன்…! மனிதர்களுக்கும் பிற விலங்குகள், பூச்சிகளுக்கும் ஏராளமான வேற்றுமைகள் இருந்தாலும், அவ்வப்போது சில தகவல்களால், ஜகத்தில் அனைவருமே (அனைத்துமே) பொதுவான உயிரினம்தான் என்பது நிரூபனமாகிறது.  

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு!

Goblin Shark: The 'Living Fossil'

சின்னத்திரையில் அறிமுகமாகவிருக்கும் கௌதமி… எந்த சீரியலில் தெரியும்?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

SCROLL FOR NEXT