Boquila trifoliolata 
பசுமை / சுற்றுச்சூழல்

Boquila trifoliolata: மரம் ஏறும் மிமிக்ரி தாவரம்!

பாரதி

உலகின் பல மர்மத் தாவரங்களுள் ஒன்று இந்த Boquila trifoliolata. இந்தத் தாவரம் மரங்கள், புதர்கள் மற்றும் பிறத் தாவரங்களின் மேல் ஏறும் தன்மைக் கொண்டது. இதனைப் பற்றிய இன்னும் சில சுவாரசியமானத் தகவல்களைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தத் தாவரங்களின் இலைகள் தங்களது வடிவம், அளவு, நிறம் போன்றவற்றை மாற்றும் தன்மையுடையது. இதன்மூலம் இந்தத் தாவரம், தாவர உண்ணிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறது.

பல வருடங்களுக்கு முன்னர் சுற்றுசூழல் ஆர்வலர் எர்னெஸ்டோ ஜியனொலி என்பவர் ஒருமுறை காட்டில் நடந்துச் சென்றார். அப்போது ஆரயன் என்றத் தாவரத்தைப் பார்த்தார். அந்தத் தாவரம் உதடு போன்ற வடிவில் இருக்கும். அந்த இலைகளுக்கு நடுவில் விசித்திரமான ஒன்றைப் பார்த்தார், ஜியனொலி. அந்த ஆரயன் தாவரத்திலிருந்து வந்த இலை போலவே மென்மையான தண்டுடன் இருந்த விசித்திரமான இலைகளைப் பார்த்தார்.

அப்போதுதான் அந்த இலைகள் Boquila trifoliolata என்பதைக் கண்டுப்பிடித்தார். பொதுவாக Boquila trifoliolata தாவரத்தின் இலைகள் மூன்று மழுங்கிய மடல்களைக் கொண்டிருக்கும். ஆனால் ஆரயன் தாவரத்தின் இலைகளுக்கு நடுவிலிருந்த Boquila trifoliolata இலைகள் பார்ப்பதற்கு அப்படியே ஆரயன் இலைகள் போலவேதான் இருந்தன என்று ஜியனொலி கூறினார். அப்போதுதான் Boquila trifoliolata இலைகள் தன்னை உருமாற்றிக்கொள்ளும் தன்மையைக் கொண்டது என்பதைக் கண்டுபிடித்தார்.

அதேபோல் இந்த இலைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அந்த இலைகளுக்கான மூளையும் கண்களும் இல்லை என்று கண்டறியப்பட்டது. அப்போது எப்படி தன்னை உருமாற்றிக்கொள்கிறது என்ற சந்தேகம் எழுந்தது. அப்போதுதான் அதற்கு மூளைப் போன்ற வேறு ஒன்று இருக்கிறது என்றும் அதன்மூலம் வேறு இன இலைகளைப் பற்றிய தகவல்களைக் கடத்திக்கொள்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்தது.

ஜியனொலி செய்த ஆய்வில் பொதுவாக இலைகள் காற்றில் வேதியல் தொடர்பான சிலவற்றை வெளியிடுகிறது. அதன்மூலம்தான் Boquila trifoliolata தாவர இலைகள் வடிவம், அளவு ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டு உருமாறுகிறதாம்.

இப்படி மரம், புதர்கள் ஏறி தன்னை உருமாற்றிக்கொள்ளும் இந்தத் தாவரம் மிமிக்ரி தாவரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாவரம் பச்சை, வெள்ளை நிறங்களில் மலர்களைத் தருகிறது. அதேபோல் பெர்ரி போன்ற சிறிய பழங்களையும் தருகிறது. மேலும் இந்தத் தாவரம் பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளுக்கு வாழ்விடமாகவும் உள்ளது.

இந்த அதிசயமிக்க தாவரத்தைத் தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவின் மழைக்காடுகளில் அதிகம் காணலாம்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT