Desert farming system!
Desert farming system! 
பசுமை / சுற்றுச்சூழல்

பயன் தரும் பாலைவன விவசாய முறை !

க.இப்ராகிம்

பாலைவன மற்றும் வறண்ட நில விவசாய முறை தற்போதைய கால சூழலுக்கு எடுத்துக்காட்டு.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக மூன்று போகங்கள் விளைந்த நிலங்களில் தற்போது ஒரு போகம் விளைவதே சிரமமாக மாறிவிட்டது. பெரும்பான்மையான விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சாகுபடி செய்ய அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் பாலைவனத்தில் கூட விவசாயம் நடைபெற்று வருகிறது. மிகக் குறைந்த அளவு தண்ணீர் கிடைக்கும் இடங்களில் கூட விவசாயம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு காரணம் விவசாயிகள் தங்கள் பகுதியினுடைய தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

இப்படி பாலைவனப் பகுதிகள் மற்றும் வறண்ட நிலப் பகுதிகளில் விவசாயிகள் டிராகன் பழங்களை விளைவிக்கின்றனர். இது வறண்ட பகுதியில் செலுத்து வளரும் தன்மை கொண்டது. குறைந்த அளவு தண்ணீரே இதற்கு போதுமானது. விவசாயிகள் நிலத்தின் தன்மையை உணர்ந்து சாகுபடியை மேற்கொள்கின்றனர். மேலும் தற்போது சிறுதானிய உணவு மக்களிடம் வரவேற்பை பெற்று இருப்பதை அடுத்து மிகக் குறைந்த தண்ணீரில் செழித்து வளரும் சிறு தானிய வகைகளை விளைவிப்பது ஏற்றது.

மேலும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் கூட பயிர்கள் தாக்குப்பிடித்து வளர கூடுதல் சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கும். சொட்டுநீர் பாசனத்தை இவ்வாறான பகுதிகளில் பயன்படுத்துவது விவசாயத்திற்கு கூடுதல் பலன் தரும். இப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு பாலைவனம் மற்றும் வறண்ட நிலப் பகுதிகளிலும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு விளைநிலங்கள் அமைந்துள்ள இடங்களினுடைய காலநிலையை முன்கூட்டிய அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் விளைச்சலை மேற்கொள்வது விவசாயிகளுக்கு பயன்பெறும்.

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

SCROLL FOR NEXT