Dumbo Octopus
Dumbo Octopus 
பசுமை / சுற்றுச்சூழல்

Dumbo Octopus: இது ஆழ்கடலின் அழகான அதிசயம்! 

கிரி கணபதி

ஆழ் கடலில் வாழும் பல உயிரினங்களில், ஒரு தனித்துவமான வசீகரிக்கும் அழகுடைய உயிரினம் ஒன்று வாழ்கிறது. அதுதான் Dumbo Octopus. ஒரு டிஸ்னி கதாபாத்திரத்தின் அடிப்படையில் இந்த ஆக்டோபஸ்க்கு டம்போ என பெயர் வைக்கப்பட்டது. மற்ற அக்டோபஸ் இனங்களை விட பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும் டம்போ ஆக்டோபஸின் ரகசியங்களை, இந்த பதிவில் கொஞ்சம் ஆராய்வோம். 

விசித்திரமான தோற்றம்: டம்போ ஆக்டோபஸ் அறிவியல் ரீதியாக Grimpoteuthis என அறியப்படுகிறது. அதன் காது போன்ற துடுப்புகள் யானையின் காதுகளைப் போல் இருப்பதால் டிஸ்னி கதாபாத்திரமான டம்போவின் பெயர் இதற்கு வைக்கப்பட்டது. இந்த தனித்துவமான துடுப்புகள் அழகுக்காக மட்டுமின்றி குறிப்பிட்ட நோக்கத்தையும் கொண்டுள்ளது. அவை ஆக்டோபஸுக்கு இறக்கைகளாக செயல்படுகின்றன. அந்த துடுப்புகளைப் பயன்படுத்தி ஆக்டோபஸ் கடலின் ஆழத்திற்கு செல்ல முடிகிறது. 

Dumbo

வாழ்விடம்: டம்போ ஆக்டோபஸ்கள் பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் உட்பட பல்வேறு கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை குளிர்ந்த, இருண்ட ஆழமான பகுதிகளையே விரும்புகின்றன. மேற்பரப்பிலிருந்து சுமார் 300 முதல் 4000 மீட்டர் ஆழத்தில் வசிக்கும் இவற்றிற்கு Hydrothermal vent-கள் மற்றும் Sea Mount-கள் விருப்பமான வாழ்விடமாக செயல்படுகிறது. அங்கு அவற்றிற்குத் தேவையான உணவுகள் கிடைப்பதால், பெரும்பாலான நேரத்தை வாழ்விடத்திலேயே கழிக்கின்றன. 

உணவுப் பழக்கம் மற்றும் இனப்பெருக்கம்: டம்போ ஆக்டோபஸ்கள் மாமிச உண்ணிகள். சிறிய மீன்கள், புழுக்கள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பில்லாதவற்றை உணவாக எடுத்துக் கொள்கிறது. தனது நீளமான மெல்லிய கைகளால் இரையைப் பிடித்து தப்பிக்க முடியாமல் பார்த்துக் கொள்கிறது. ஆழ்கடல் உயிரினங்களை பற்றி படிப்பதில் உள்ள சவால்கள் காரணமாக டம்போ ஆக்டோபஸ்களின் இனப்பெருக்க நடத்தை பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் இவற்றின் ஆயுட்காலம் மிகவும் குறுகியவை என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 

வசீகரிக்கும் அழகுடைய இந்த வித்தியாசமான ஆக்டோபஸ் இனங்கள், கடலின் ஒட்டுமொத்த பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இவற்றைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள ஆராய்ச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இந்த அற்புதமான உயிரினம் பற்றிய கூடுதல் தகவல்களை நாம் அறிய முடியும். 

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT