Dubai. 
பசுமை / சுற்றுச்சூழல்

காலநிலை மாற்றத்திற்கு எதிராக களம் இறங்கும் குடும்ப பராமரிப்பு அமைப்பு!

கிரி கணபதி

அபுதாபியில் உள்ள FFCA அமைப்பு அந்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பங்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகில் காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகள் தீவிரமாக ஏற்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அப்படிதான் ஐக்கிய அரபு அமிரகத்தில் முக்கிய நகரமான துபாயும் முடிவெடுத்துள்ளது. அங்கு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான COP28 மாநாடு நடந்து வரும் நிலையில், பல முக்கிய திட்டங்களை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. 

அபுதாபியில் பிரபலமான குடும்ப பராமரிப்பு அமைப்பு காலநிலை மாற்றத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இவர்கள் UICCA உடன் இணைந்து பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாக கூறியுள்ளனர். மேலும் காலநிலை மாற்றம் சார்ந்த தீவிரத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை அணியாக திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபடவும் முயற்சி செய்கின்றனர். இதுவே அவர்களின் முக்கிய இலக்கு என்கின்றனர். 

அபுதாபியில் அடுத்த ஆண்டில் சமூகம் சார்ந்த பல நிகழ்வுகள் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களை அணி திரட்டி அவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் ஒர்க்ஷாப்புகளும் நடத்தப்படும். குறிப்பாக இதில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பேரணி விழிப்புணர்வு பேச்சுக்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இதன் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்தகைய பேரணி மற்றும் விழிப்புணர்வு மூலமாக தனி நபர்கள் மற்றும் குடும்பங்களில் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு மேம்படும் என்கின்றனர். துபாயின் இந்த முடிவு மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 

என்னதான் இந்த நாடு வறண்ட பாலைவன நாடாக இருந்தாலும், அவர்களின் முன்னேற்பாடுகளும், முயற்சிகளும் உலக நாடுகளை வியக்கச் செய்கிறது. இப்படி ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது. 

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT