பசுமை / சுற்றுச்சூழல்

இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

க.இப்ராகிம்

லகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் 106 சதவீதம் உயர்ந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய நாடு நிலம், கடல், நீர் நிலைகள், மலைகள், பாலைவனங்கள், பனிமலைகள் என பல்வேறு இயற்கை சூழல்களை தனக்குள் கொண்ட அழகான நாடாகும். இதனால் இந்தியாவுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதில் வியப்பில்லை.

இதற்காக இந்திய அரசு சுற்றுலாத்துறையை உருவாக்கி, நாடு முழுவதும் மற்றும் மாநிலங்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அன்னிய செலாவணி வருவாயும் உயர்ந்திருக்கிறது. இவ்வாறு கடந்த ஆண்டில் 21.24 லட்சம் பேர் இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த நிலையில், நடப்பாண்டில் 43.80 சதவீதம் பேர் இந்திய சுற்றுலாவுக்காக வருகை தந்திருக்கின்றனர்.

இதேபோல், உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த 2021ம் ஆண்டில் 67.7 கோடியாக இருந்த நிலையில், 2022ம் ஆண்டு அது 173 கோடியாக உயர்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நடப்பாண்டில் அது இன்னும் உயர்ந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. அரசு எடுத்த தீவிர முயற்சிகளின் காரணமாக உலகம் முழுவதும் மட்டுமல்லாமல், இந்தியாவின் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவுக்காக அதிக நேரத்தை ஒதுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டில் 1.80 கோடி பேர் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட நிலையில், நடப்பாண்டில் 1.09 சதவீதம் பேர் மட்டுமே தற்போது வரை சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT