Indotyphons Ambank
Indotyphons Ambank 
பசுமை / சுற்றுச்சூழல்

இலங்கையில் புதிய வகை பாம்பு கண்டுபிடிப்பு!

க.இப்ராகிம்

இலங்கையில் புதிய பாம்பு வகை கண்டுபிடிப்பு.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். பாம்பிடம் இருக்கும் விஷ தன்மை மனிதனை கொல்லக் கூடியது என்பதால் பயத்தின் காரணமாக மனிதர்கள் கண்ணில் தென்படும் பெரும்பாலான பாம்புகள் அடித்துக் கொள்ளப்படுகின்றன. இப்படி பல்வேறு காரணங்களுக்காக பாம்புகள் அதிகம் கொள்ளப்படுவதால், பாம்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே நேரத்தில் புதிய பாம்பு வகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் சுமார் 3,600 பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பினங்கள் உள்ளது. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை.

இந்த நிலையில் இலங்கையில் புதிய பாம்பு வகை கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரும் உயிரினங்கள் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் கொழும்பு பல்கலைக்க பேராசிரியர் குழு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு வகையை ஆய்வு செய்ததில், அது இது வரை கண்டறியப்படாத பாம்பு வகை என்று தெரிவித்து இருக்கிறது.

இந்த புதிய வகை பாம்புக்கு indotyphons ambank என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது விஷத்தன்மை கொண்ட பாம்பு வகை என்றும் சொல்லப்படுகிறது. இந்த புதிய பாம்பு வகை உலர் நிலத்தில் வாழும் தன்மை கொண்டது என்றும், மற்ற பாம்புகளைப் போன்ற குணாதிசயம் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் உலகத்தில் உள்ள பாம்பு வகைகளின் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்து இருப்பதாகவும், இலங்கையில் காணப்படும் 108 வகை பாம்பு வகைகளில் கூடுதலாக இதுவும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT