Aliens
What will happen if oxygen on Earth is doubled? 
பசுமை / சுற்றுச்சூழல்

பூமியில் ஆக்சிஜன் இருமடங்காக அதிகரித்தால் என்ன ஆகும்? 

கிரி கணபதி

நாம் சுவாசிக்கும் காற்றில் 21% ஆக்ஸிஜன் உள்ளது. இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒரு மூலக்கூராகும். ஒருவேளை பூமியில் திடீரென ஆக்ஸிஜன் அளவு இரு மடங்காக அதிகரித்தால் என்ன நடக்கும்? இது ஒரு கற்பனையான கேள்விதான் என்றாலும் இதனால் ஏற்படும் விளைவுகள் ஆச்சரியமாகவும், சில சமயங்களில் அபாயகரமானதாகவும் இருக்கும். இதன் முழு விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

நேர்மறை விளைவுகள்: 

  • இப்போது முன்பை விட அதிக ஆக்சிஜன் கிடைப்பதால் நமது உடல்கள் அதிக ஆற்றலை உற்பத்தி செய்து சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் நாம் அதிக நேரம் சோர்வின்றி திறம்பட செயல்பட முடியும். விளையாட்டு வீரர்கள் மற்றும் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகப்பெரிய நன்மை. 

  • ஆக்சிஜன் நம் உடலின் செல்களை சரி செய்யவும் காயம் பட்ட திசுக்களை குணப்படுத்தவும் உதவுகிறது. எனவே ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதால் காயங்கள் மற்றும் நோய்கள் விரைவாக குணமாகும். 

  • ஆக்சிஜன் தாவரங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. அதிக ஆக்சிஜன் கிடைப்பதால் தாவரங்கள் வேகமாக வளர்ந்து உணவு உற்பத்தி அதிகரிக்கும். இது பூமியில் உள்ள மனிதர்கள் மற்றும் உயிரினங்களுக்கு அதிக உணவு கிடைக்க வழிவகுக்கும். 

எதிர்மறை விளைவுகள்: 

  • அதிக ஆக்சிஜன் இருந்தால் தீ விபத்துக்கள் அதிகமாக நடக்கும். ஏனெனில் ஆக்சிஜன் எரிதலுக்கு உதவுகிறது. இதனால் காடுகள் மற்றும் பிற தாவரங்கள் எளிதில் தீப்பிடித்து சுற்றுச்சூழல் சேதத்திற்கு வழிவகுக்கும். 

  • அதிகரித்த ஆக்ஸிஜன் அளவு பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால் பயிர் சேதம் மற்றும் பல நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும். மேலும் இது உணவுச் சங்கிலியில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கு வழிவகுக்கும். 

Giant Insect
  • மிக அதிகமான ஆக்சிஜன் அளவு மனிதர்களுக்கு நுரையீரல் நச்சுத்தன்மை மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் பூமியின் வெப்பத்தை சேமிக்கும் திறன் அதிகரித்து, பூமியின் வெப்பம் இப்போது இருப்பதைவிட பன்மடங்காக உயரலாம். இதனால் காலநிலை மாற்றம் வேகம் எடுத்து, பூமியில் பல அழிவு சம்பவங்கள் ஏற்படலாம். 

பூமியில் ஆக்ஸிஜன் அளவு இருமடங்காக அதிகரிப்பது நன்மை தீமை என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிக்கலான நிகழ்வாகும். சில உயிரினங்களுக்கு இது பயனளிக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும். எனவே பூமி சமநிலையில் இருப்பதற்கு இப்போது இருக்கும் ஆக்ஸிஜன் அளவே போதுமானது. 

புறநானூறு படத்தில் சூர்யாவிற்கு பதில் தனுஷா?

எல்லாவற்றிலும் உன்னை ஈடுபடுத்து, போராடு வெற்றி நிச்சயம்!

ட்ராபி வெல்வது இருக்கட்டும்… முதலில் பாகிஸ்தான் வருவீங்களா? - இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

துன்பத்தை வரவேற்போம்!

அரசின் ஓராண்டு சான்றிதழ் நாட்டுப்புறக் கலைப் பயிற்சி!

SCROLL FOR NEXT