Cold coffee...
Cold coffee...  pixabay.com
உணவு / சமையல்

இதோ சுவையான 8 வகை Cold coffee ரெசிபிஸ்!

பாரதி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று காபி. இப்போது காபியில் விதவிதமான சுவையில் வந்துவிட்டது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Espresso Coffee:

முதலில் காபி தூள், சர்க்கரை, மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் கலக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு க்ளாஸில் ஐஸ் க்யூப்ஸ், செய்து வைத்த கலவை மற்றும் பால் சேர்த்து கலக்கிவிட்டு குடித்தால் எஸ்ப்ரெஸோ காபி சுவையாக இருக்கும்.

Banana milk coffee:

முதலில் நன்றாக பழுத்த இரண்டு வாழைப்பழங்களை நறுக்கி வைக்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு காபி தூள், பால் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் ஒரு க்ளாஸில் ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்த கலவை ஊற்றிக் குடித்தால் சுவையான வாழைப்பழ பால் காபி தயார்.

Banana milk coffee:

Cappuccino Cold coffee:

து பொதுவாக அனைவரும் விரும்பி குடிக்கும் காபி. சர்க்கரை, காபி தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதனை க்ளாஸில்  மாற்றி காய்ச்சிய பால் ஊற்றி மெதுவாக கலந்தால் கோல்ட் காபி ரெடி.

Vennila cold coffee:

முதலில் வென்னிலா ஐஸ் க்ரீம், காபி தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் கலக்க வேண்டும். பின்னர் ஒரு க்ளாஸில் ஐஸ் க்யூப்ஸ் வைத்து அந்த கலவையை சேர்த்து காய்ச்சிய பால் ஊற்றி கலக்கினால் வென்னிலா கோல்ட் காபி ரெடி.

Iced Caramel Macchiato:

காபி தூள், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலவை செய்ய வேண்டும்.

பின்னர் வெண்ணிலா சிரப், பால் மற்றும் ஐஸ் கியூப் சேர்த்தவுடன், அந்த காபி கலவையை சேர்த்து மேலாக க்ரீம் சேர்த்து குடித்தால் கேரமல் மச்சியோட்டா சுவையாக இருக்கும்.

Iced Caramel Macchiato

Peanut butter coffee:

ரு கின்னத்தில் ஒரு டீஸ்பூன் காபி தூள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் பீனட் பட்டரை  (வேர்கடலை மற்றும் வெண்ணெய்யால் செய்யப்படும் ஒன்று. கடைகளில் கிடைக்கும்) தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனுடன் பால் மற்றும் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து குடித்தால் பீனட் பட்டர் காபி சுவையாக இருக்கும்.

Caramel coconut cold coffee:

ழக்கம்போல் சர்க்கரை , காபி தூள், தண்ணீர் சேர்த்து கலவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிளாஸில் ஐஸ் கியூப்ஸ், செய்து வைத்த கலவை மற்றும் பாலிற்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால் கேரமல் தேங்காய் கோல்ட் காபி ரெடி.

Caramel coconut cold coffee

Chocolate iced Mocha:

ரு க்ளாஸில் காபி தூள், சாக்லேட் பவுடர், வெண்ணிலா சிரப், சர்க்கரை மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதனுடன் ஐஸ் க்யூப்ஸ், பால் சேர்த்து மீண்டும் கலக்கினால்  Chocolate iced Mocha தயார்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT