Cauliflower Masal Dosa.
Cauliflower Masal Dosa. 
உணவு / சமையல்

ஊரே மணக்கும் காலிஃப்ளவர் மசால் தோசை!

கிரி கணபதி

காலிபிளவர் மசால் தோசை. ஒரு மெல்லிய தோசையினுள்ளே  காலிஃப்ளவர் மசாலா வைத்து  அழகாக மடித்து உங்களுக்கு சாப்பிடக் கொடுத்தால், அதன் சுவை உங்கள் கைகளிலும் வாயிலும் எப்போதும் இருக்கும். அதேபோல இந்த தோசையை நீங்கள் வீட்டில் சமைக்கும்போது நீங்கள் இதை சமைக்கிறீர்கள் என்று உங்கள் ஊருக்கே தெரியும் அளவுக்கு மணம் வீசும்.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு 

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு 

தக்காளி - 2

வெங்காயம் - 2

முந்திரிப்பருப்பு - 5

செய்முறை:

முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து காலிஃப்ளவரை கொதிக்க விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் தக்காளி கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பிறகு, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

முந்திரிப் பருப்பை கொஞ்சமாக தண்ணீர் விட்டு பேஸ்ட் போல அரைத்து மசாலாவில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வேக விடவும். அடுத்ததாக காலிஃப்ளவரை தண்ணீரில் இருந்து வடிகட்டி எடுத்து, மசாலாவில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை மூடி வைக்கவும்.

பின்னர் தோசைக்கல்லில் தோசை மாவை ஊற்றி மெல்லியதாக தோசையை பரப்பி வேகவிடவும். தோசை பாதி வெந்ததும் அதில் மசாலாவை மேலே பரப்பி மூடி விடவும்.

இறுதியாக தோசை வெந்ததும் அதை அப்படியே இரண்டாக மசாலாவோடு சேர்த்து மடித்தால் கமகமக்கும் காலிஃப்ளவர் மசால் தோசை தயார்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT