காரம் ஸ்நாக்ஸ்... Image credit - youtube.com
உணவு / சமையல்

பேபி கார்ன் வறுவலும், மிளகு காராசேவும்!

இந்திராணி தங்கவேல்

பேபி கார்ன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

பேபி கார்ன்- 500 கிராம்

மிளகாய்த்தூள் -ஒரு டேபிள் ஸ்பூன் 

மல்லித்தூள்- ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன் 

அரிசி மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு -ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா -ரெண்டு சிட்டிகை

சாட் மசாலா -ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

பேபி கார்னை நீளவாக்கில் கைவிரல் அளவில் வெட்டிக் கொள்ளவும். அவற்றினை ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் போட்டு  மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு போட்டு லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு பக்கோடா போல பேபி கார்ன் கலவையை  பிசிறி நன்றாக வேகவிட்டு பொரித்து எடுக்கவும். ஒரு கைப்பிடி கருவேப்பிலையை வறுத்து அதன் மீது தூவினால் கலர்ஃபுல்லாக  இருப்பதுடன் நல்ல ருசியையும் கொடுக்கும். சாட் மசாலா தூவி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். செய்து அசத்துங்க.

மிளகு காராசேவு:

செய்யத் தேவையான பொருட்கள்:

கடலை மாவு- 500 கிராம்

அரிசி மாவு- 100 கிராம்

உடைத்த மிளகு -ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் -அரை டீஸ்பூன்

மிளகாய் பொடி -ஒரு டீஸ்பூன்

வெண்ணெய் -ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

வாயகன்ற பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் போட்டு உப்பு சேர்த்து கலந்து கொதிக்கும் எண்ணெயில் அரை கரண்டி விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு  மாவை கெட்டியாக பிசையவும். காராசேவு தேய்க்கும் அச்சில் மாவை வைத்து தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிளகை காராசேவு கட்டையில் அடைத்து கொள்ளாதபடிக்கு உடைத்து போடவும். மிளகு பூண்டு வாசனையுடன் கமகமக்கும் மிளகு காராசேவு ரெடி.

பகவானுக்கும் அவனது திருநாமத்துக்கும் வேறுபாடும் இல்லை என்பதை உணர்த்தும் கிருஷ்ண துலாபாரம்!

Egg Vs Paneer: புரதச் சத்திற்கு சிறந்தது எது தெரியுமா?

ஒரு நாளில் நாம் உண்ணும் உணவுக்கும் நமது தூக்க முறைமைக்கும் என்ன சம்பந்தம்?

துலா ஸ்நானத்துக்கு மட்டும் ஏன் இத்தனை மகிமை?

Manju Warrier Beauty tips: மஞ்சு வாரியர் அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT