தேவையான பொருட்கள்:
மைதா மாவு -1கப்
கெட்டியான பால் ஆடை -2 ஸ்பூன்
சீனி -4 ஸ்பூன்
முந்திரி பருப்பு -10
ஏலக்காய் -8
நெய் -100 கிராம்
உப்பு -1சிட்டிகை
செய்முறை:
மைதா மாவு, பால் ஆடை, ஒரு சிட்டிகை உப்பு, மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ரொட்டி மாவு பதத்தில் கலந்து சிறு உருண்டைகளாக செய்து வைத்து கொள்ளவும். முந்திரி பருப்பு வறுத்து மிகவும் சின்னமாக தூள் செய்யவும். சீனி, முந்திரி, ஏலப்பொடி மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும். உருண்டைகளை வட்டமாக செய்து நெய்யில் பொரித்து அகலமான தாம்பாளத்தில் வைத்து முந்திரி, சீனி கலந்த பொடியை இருபுறமும் தூவி உபயோகப்படுத்தவும்.