கேரட் கீர்!
கேரட் கீர்! www.lekhafoods.com
உணவு / சமையல்

கண்பார்வையை சீராக வைத்துக்கொள்ள கேரட் கீர்!

இரவிசிவன்

ன்றைய இளைஞர்கள் குழந்தைகள் பலர் கண்ணாடி அணிந்துகொண்டு இருப்பதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். இதற்கு காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமான தொலைக்காட்சி, தொலைபேசி, கணினி பயன்படுத்துவது ஒரு காரணமாக இருந்தாலும் அவர்கள் போதுமான அளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். அப்படிபட்ட உணவுகளை நாம் அன்றாடம் உட்கொள்ளுவதன் மூலம் நாம் இந்த பிரச்சனையை  தவிர்க்கலாம். அதற்காக அன்றாடம் நாம் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஓர் எளிய மற்றும் ஆரோக்கியமான ஒன்று தான் கேரட் கீர்.

கேரட் கீர் செய்யும் முறை:

நான்கு கேரட்  சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே அளவு தேங்காயைத் துருவி எடுத்து  கொள்ளவும்.

தேவையான அளவு பனங்கற்கண்டு, 500ml பால் சேர்த்து  மிக்ஸியில் இரண்டு நிமிடங்கள் அரைத்தால் ஆரோக்கியமான அருமையான கேரட் கீர் ரெடி.

திடீரென விருந்தாளிகள் வந்துவிட்டால் ஆரோக்கியமான இந்த கேரட் கீர் செய்து கொடுத்து அசத்தலாம்.

இந்த கேரட் கீர்  நாம் அன்றாடம் காலை உணவிற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அல்லது உடற்பயிற்சி செய்து முடித்து விட்டு ஒரு பத்து நிமிடங்கள் பிறகும் இந்த கேரட்கீர் எடுத்துக் கொள்ளலாம்.

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

SCROLL FOR NEXT