Panneer Recipe!
Panneer Recipe! 
உணவு / சமையல்

புத்தாண்டுக்கு ஏத்த செட்டிநாடு ஸ்டைலில் ஒரு பன்னீர் ரெசிபி! 

கிரி கணபதி

உங்களுக்கு பன்னீர் உணவு மிகவும் பிடிக்கும் என்றால் அதை எப்போதும் ஒரே மாதிரி சமைக்காமல், அடுத்தமுறை இப்படி வித்தியாசமாக செட்டிநாடு ஸ்டைலில் பன்னீர் சமைத்துப் பாருங்கள். இந்த ரெசிபி பூரி, சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். குறிப்பாக இதை செய்வது சுலபம் என்பதால், விரைவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவை நீங்கள் தயாரித்து முடிக்கலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் - 250 கிராம் 

தக்காளி - 1

வெங்காயம் - 1

மஞ்சள்தூள் - ½ ஸ்பூன் 

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - சரியான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

வரமிளகாய் - 4

சோம்பு - 1 ஸ்பூன் 

கிராம்பு - 2

மிளகு - 5

துருவிய தேங்காய் - 5 ஸ்பூன் 

பட்டை - சிறிய துண்டு

மல்லி விதை - 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சோம்பு, கிராம்பு, மல்லி, பட்டை, வரமிளகாய், தேங்காய், மிளகு ஆகியவற்றை சேர்த்து வதக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பன்னீர் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து தண்ணீரில் ஊற வையுங்கள். பின்னர் வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வேக விடுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிய பிறகு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். 

இறுதியில் தண்ணீரில் ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எடுத்து அதில் உள்ள நீரை பிழிந்துவிட்டு கொதிக்கும் மசாலாவில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால், சூப்பர் சுவையில் செட்டிநாடு பன்னீர் ரெசிபி தயார். இதை இந்த புத்தாண்டுக்கு செய்து அசத்துங்கள். 

பருவநிலை மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வது எப்படி?

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT