children
children 
உணவு / சமையல்

சாப்பிட மறுக்கும் குழந்தைகளைக் கவர வண்ண வண்ண உணவுகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

பச்சை கலர் தோசை, ஆரஞ்சு கலர் இட்லி, மஞ்சள் கலர் ஆப்பம், சிவப்பு வண்ண குழிப்பணியாரம் என குழந்தைகளை கவரும் வகையில் நம் கற்பனை குதிரையை தட்டி செய்து கொடுத்தால் வேண்டாம் என அடம் பிடிக்க மாட்டார்கள். இட்லி தோசை மட்டுமல்ல குழிப்பணியாரம், ஆப்பம், இடியாப்பம், கொழுக்கட்டை என வித்தியாசமான வண்ணங்களில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

முதலில் பச்சை கலர் தோசைக்கு வருவோம்:

Green Color Dosa

தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லி ஒரு கைப்பிடி

  • பச்சை மிளகாய் ஒன்று

  • இஞ்சி ஒரு துண்டு

  • உப்பு கால் ஸ்பூன்

  • இட்லி மாவு ஒரு கப்

செய்முறை:

கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நைசாக அரைத்து இட்லி மாவில் கலந்து தோசை வார்க்க வேண்டியது தான். மாவு ஒன்றுதான் ஆனால் வெரைட்டியாக கலர்ஃபுல்லாக செய்து கொடுக்கலாம்.

ஆரஞ்சு வண்ண இட்லி:

Carrot Idly

தேவையான பொருட்கள்:

  • இட்லி மாவு ஒரு கப்

  • கேரட் ஒன்று

  • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

  • உப்பு 1/4 ஸ்பூன்

  • சிகப்பு மிளகாய் ஒன்று

செய்முறை:

ஒரு கேரட்டை துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து மாவில் கலந்து இட்லி வார்க்க கண்ணைக் கவரும் சத்தான ஆரஞ்சு வண்ணத்தில் இட்லி ரெடி.

சிவப்பு வண்ண குழிப்பணியாரம்:

Kuzhipaniyaram

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் 1

  • தக்காளி 1

  • உப்பு கால் ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் ஒன்று

  • இஞ்சி ஒரு துண்டு

  • இட்லி மாவு ஒரு கப்

செய்முறை:

பீட்ரூட்டை தோல் சீவி துண்டுகளாக்கி, தக்காளி, உப்பு மிளகாய் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைத்து மாவில் கலக்கி குழிப்பணியாரம் செய்ய கண்ணை கவர்வதுடன் நாவிற்கும் சுவையாக இருக்கும்.

மஞ்சள் கலர் ஆப்பம்:

Appam

தேவையான பொருட்கள்:

  • கேரட் ஒன்று

  • மஞ்சள் தூள் அரை ஸ்பூன்

  • உப்பு கால் ஸ்பூன்

  • ஆப்ப மாவு ஒரு கப்

செய்முறை:

துண்டுகளாக்கிய கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஆப்ப மாவில் கலந்து ஆப்பம் செய்ய மங்களகரமான மஞ்சள் கலரில் ஆப்பம் தயார். மருத்துவ குணம் நிறைந்த ருசியான ஆப்பம் ரெடி.

பச்சை கலர் இட்லி:

Idly Recipe

தேவையான பொருட்கள்:

  • புதினா ஒரு கைப்பிடி

  • கொத்தமல்லி ஒரு கைப்பிடி

  • பச்சை மிளகாய் ஒன்று

  • உப்பு சிறிது

  • இட்லி மாவு ஒரு கப்

செய்முறை:

புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்து மாவில் கலந்து இட்லி வார்க்க மணமான பசியை தூண்டக்கூடிய பச்சை வண்ண இட்லி தயார்.

சிகப்பு வண்ண தோசை:

Dosa recipe

தேவையான பொருட்கள்:

  • தக்காளி 4

  • சிகப்பு மிளகாய் இரண்டு

  • உப்பு அரை ஸ்பூன்

  • தோசை மாவு ஒரு கப்

செய்முறை:

தக்காளி மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து தோசை மாவில் கலந்து வார்க்க கண்ணை கவரும் தோசை ரெடி.

இதேபோல் கறிவேப்பிலை, கீரை வகைகளையும் கொண்டு செய்யலாம்.

இப்படி செயற்கை கலர் எதுவும் உபயோகிக்காமல் வண்ண வண்ண காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டே கண்ணைக் கவரும் அதே சமயம் சத்தான உணவை தயாரித்துக் கொடுக்க குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதேபோல் சட்னி களையும் விதவிதமான வண்ணங்களில் செய்து அசத்தலாம்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT