Curd Milk Sweet
Curd Milk Sweet 
உணவு / சமையல்

Curd Milk Sweet: இந்த ஸ்வீட் செய்ய 15 நிமிஷம் போதும்! 

கிரி கணபதி

ஸ்வீட் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். பெரும்பாலான ஸ்வீட் வகைகளை செய்வதற்கு நேரம் ஆகும் என்பதால், அவற்றைக் கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் உங்களிடம் தயிர் மற்றும் கண்டன்ஸ்டு பால் இருந்தால் போதும் வீட்டிலேயே எளிதாக 15 நிமிடத்தில் ஸ்வீட் தயாரித்து விடலாம். சரி வாருங்கள் அது எப்படி எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • கண்டன்ஸ்டு மில்க் - 250 கிராம்.

  • தயிர் 1 லிட்டர்

  • குங்குமப்பூ சிறிதளவு

  • ஏலக்காய் 2

செய்முறை: 

முதலில் தயிரில் உள்ள தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். தயிரை வடிகட்ட ஒரு வெள்ளைத் துணியில் அதை போட்டு தண்ணீரைப் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கெட்டியான தயிர் கிடைக்கும். பின்னர் இந்தத் தயிரை நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். 

அடுத்ததாக தயிரில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாகக் க்ரீமி பதத்திற்கு கலக்க வேண்டும். பின்னர் அதில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி, சிறு கிண்ணத்தில் ஊற்றி இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்தால், 15 நிமிடத்தில் சூப்பர் சுவையில் ஸ்வீட் தயார்.

இதன் சுவை உண்மையிலேயே வேற லெவலில் இருக்கும். திடீரென வீட்டிற்கு உறவினர்கள் வந்தால், இந்த ஸ்வீடை நீங்கள் செய்து கொடுக்கலாம். அல்லது உங்களுக்கே ஸ்வீட் சாப்பிட வேண்டும் போல இருந்தால், முற்றிலும் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். 

ஒருமுறை இந்த ஸ்வீடை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

வெந்நீர் Vs குளிர்ந்த நீர்: எதில் குளிப்பது உடலுக்கு நல்லது?

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்!

"தோனியும் நானும் கடைசி முறை ஒன்றாக விளையாடப் போகிறோம்..." – விராட் கோலி!

அதிக அளவில் மக்களை ஈர்க்கும் உலகின் டாப் 10 மியூசியங்கள்!

iPad Mini: 2024 இறுதிக்குள் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்! 

SCROLL FOR NEXT