samayal tips... Image credit - youtube.com
உணவு / சமையல்

சுவையான வாழைக்காய் பொடி - செட்டி நாட்டு வாழைக்காய் வறுவல்!

எஸ்.மாரிமுத்து

வாழைக்காய் பொடி

தேவையான பொருட்கள்:

பெரிய வாழைக்காய் - 1

காய்ந்த மிளகாய் - 3

மிளகு - 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

புளி - சிறிது, உப்பு - சிறிது

பெருங்காயம் - சிறிது

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பின் மேல் வாழைக்காயை சப்பாத்தி சுடும் புல்கா கம்பி மேல் வைத்து திருப்பி திருப்பி விட்டு சுட்டு எடுக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் இல்லாமல் அனைத்து பொருட்களையும் வறுக்கவும். ஆறியதும் லேசாக பல்ஸ் மோடில், பொடித்து எடுத்து வைக்கவும் ஆறியதும் வாழைக்காயை தோல் உரித்து கட் செய்து மிக்ஸியில் பொடி செய்யவும். அதன் மேல் பொடித்த பொடி சேர்த்து பல்ஸ் மோடில் பொடி செய்து எடுக்கவும். வாழைக்காய் பொடி ரெடி. இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசியோ ருசி.

செட்டி நாட்டு வாழைக்காய் வறுவல்:

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

எலுமிச்சம் பழம் - 1/2

மல்லி தூள் -1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்

பூண்டு பல் - 5

இஞ்சி  பூண்டு- சிறு துண்டு (பேஸ்ட்

ஆக்கவும்) - சிறு துண்டு

சோம்பு - சிறிது.

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்.

உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கு

செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி சிறு வட்ட துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக எடுத்து ஆறவைக்கவும்.

 ஆறவைத்த வாழைக்காய் துண்டுகளின் மேல் உப்பு, சோம்புத்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைசாறு, மல்லித்தூள், மிளகாய்தூள் சிறிது நீர் தெளித்து பிசறிவிட்டு பத்து நிமிடம் ஊறவிடவும்.

 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய தணலில் வாழைக்காய்களை சிறிது சிறிதாக போட்டு இரு புறமும் வெந்ததும் பொரித்து எடுக்கவும்.

வேறு ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் சிறிது சோம்பு சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதில் வறத்து வைத்திருக்கும் வாழைக்காய்களை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறிவிட்டு வேக வைக்கவும். 5 நிமிடம் கழித்து வாழைக்காயை எடுத்து பாத்திரத்தில் வைக்கவும்.

இப்போது சூடான செட்டிநாட்டு வாழைக்காய் வறுவல் ரெடி.

வரலாற்றுச் சின்னம் நாமக்கல் கோட்டை பற்றி தெரியுமா?

இது மட்டும் உங்களுக்குத் தெரிஞ்சா தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை டன் கணக்கில் சாப்பிடுவீங்க! 

'Whale fall' என்றால் என்ன தெரியுமா?

Chewing gum Vs Bubble gum: எது அதிக நேரம் புத்துணர்ச்சி தரும் தெரியுமா?

Mouni Roy Beauty Secrets: மௌனி ராய் அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT