Mathur Vadai... Image Credits: cookpad.com
உணவு / சமையல்

மத்தூர் வடை உருவான கதை தெரியுமா?

நான்சி மலர்

யில் வர நேரமாகிவிட்டது என்று கையில் கிடைத்த பொருட்களை வைத்து அவசர அவசரமாக செய்த வடை தான் இன்று உலகப்புகழ் பெற்ற மத்தூர் வடை என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அந்த கதையைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1917ல் ராமசந்திர புத்தியா என்பவர் மத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு சின்ன டிபன் சென்டர் வைத்து நடந்தி வந்தார். அவர் கடைக்கு வரும் பயணிகளுக்கு டீ மற்றும் பகோடாவை விற்றுக்கொண்டிருந்தார்.

ஒருநாள் ராமசந்திர புத்தியாவிற்கு பகோடா செய்ய சற்று தாமதமாகிவிட்டது. ரயிலும் விரைவில் வந்துவிடும் என்று நினைத்த அவர் கைகளில் கிடைத்த பொருட்களை வைத்து பயணிகள் சாப்பிடுவதற்கு ஏதேனும் சுவையாக செய்ய வேண்டும் என்று அவசர அவசரமாக ஒரு வடையை தயார் செய்தார். மற்ற வடைகளைப்போல இந்த வடைக்கு மாவு அரைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வடையின் சுவை பிடித்துப்போன மக்கள் அந்த வடைக்கு ‘மத்தூர் வடை’ என்று அந்த ஊரின் பெயரையே வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

100 வருடங்கள் கடந்தும் இன்றும் கர்நாடகாவில் மத்தூர் வடை புகழ் பெற்று விளங்குகிறது. கர்நாடகா மாநிலத்தில் மந்தியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் பெங்களூரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மத்தூர் வடை மக்களுக்கு பிடித்த மிகவும் பிரபலமான டீ டைம் ஸ்நாக்ஸ் ஆகும். பெங்களூர்- மைசூர் செல்லும் ரயிலில் பயணிப்போர் இங்கு வந்து வடையை சுவைத்துவிட்டு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமசந்திர புத்தியா மத்தூர் வடையை எப்படி தயாரித்தார் தெரியுமா? வெங்காயம், அரிசி மாவு, ரவை, முந்திரி, தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை, சரியான விதத்தில் மசாலா சேர்த்து தயாரிக்கப்படுகிறது . அன்று அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் உலகப்புகழ் பெற்ற சுவையான வடையை தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்பது. வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது, எப்போதுமே அவசரமாகவோ அல்லது விபத்தாகவோ தான் புதுமையான விஷயங்கள் கண்டுப்பிடிக்கப் படுகிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது.

நன்றியுணர்வு தரும் எண்ணற்ற நன்மைகள்!

மகாளய பட்ச மஹாபரணி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?

தஞ்சை கோயில் உருவானதில் கருவூர் சித்தரின் பங்கு என்ன தெரியுமா?

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

SCROLL FOR NEXT