பான்கேக்... 
உணவு / சமையல்

குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் ஈஸி பான்கேக்!

சேலம் சுபா

எல் கே ஜி - யு கே ஜி படிக்கும் சிறு குழந்தைகளுக்கு கடிப்பதற்கு மிகவும் மென்மையாகவும் அதே சமயம் சத்து நிறைந்ததாகும் பள்ளிக்கு கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எல்லா தாய்மார்களுக்கும் உண்டு. இதோ இது போன்ற பான் கேக் வகைகள் செய்து தந்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

மேலும் முட்டை என்பது தற்போது அசைவ வகையில் சேராமல் தினம் ஒரு முட்டையை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது என்கிறார்கள். ஆனால் அதன் மணத்தை சில குழந்தைகள் விரும்புவதில்லை என்பதால் இது போன்ற பான்கேக் வகைகளில் சேர்த்து தருவதால் முட்டையின் சத்துக்கள் அந்த குழந்தைகளுக்கு செல்ல ஏதுவாகிறது. வாருங்கள் பான்கேக் செய்யும் முறையை காணலாம்.

தேவையான பொருட்கள்;
முட்டை - ஒன்று
மைதாமாவு  - இரண்டு ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் -மூன்று துளிகள் சர்க்கரை-  2 ஸ்பூன்
பால்- இரண்டு ஸ்பூன்
ஆயில் அல்லது நெய்-  ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா - ஒரு பின்ச்


செய்முறை;
முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.  ஒரே பக்கமாக சீராக அடித்தால்தான் கேக் மிருதுவாக வரும். அதில் நன்கு நைசாக அரைத்த சர்க்கரை, காயவைத்து ஆறவைத்த பால், வெண்ணிலா எசன்ஸ், சலித்த மைதா, பேக்கிங் சோடா, நெய் அனைத்தையும் கலந்து ஒரே சீராக 5 நிமிடம் பிளண்டர் அல்லது கரண்டியால் நன்றாக அடிக்கவும். 

அடுப்பில் தவாவை வைத்து மிதமான சூட்டில் நடுவில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி அளவு கலவையை எடுத்து தடவாமல் அப்படியே விட்டு ஒரு நிமிடத்தில் திருப்பி போட்டு 5 செகண்ட் விட்டு எடுக்கவும். இதற்கு தீ மிகவும் குறைவாக இருப்பது அவசியம். பொறுமையாக எடுக்க வேண்டும். ஊற்றியதும் மேலே பபுல்ஸ் வந்ததும் எடுப்பது திருப்பி போடுவது நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கு நெய் ஊற்றி தருவது அவர்களின் ஊட்டச்சத்திற்கு உதவும். இதன் மிருதுத்தன்மை நிச்சயம் குழந்தைகளை விரும்ப வைக்கும்.

குறிப்பு - இதில் மைதாவிற்குப் பதில் கோதுமை மாவு, சர்க்கரைக்குப் பதில் நாட்டுச்சர்க்கரை, நம் வீட்டில் அரைத்த தோசை மாவு, பிடித்த பிளேயர் எசன்ஸ் சேர்ப்பது அவரவர் சாய்ஸ்.

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

கமல் வைத்து ஒரு மொக்கை படத்தை இயக்கினேன்… ஆனால்… – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்!

டேஸ்டியான வாழைத்தண்டு பால் கறி மற்றும் முட்டை ஊறுகாய் செய்யலாம் வாங்க!

ஐபிஎல் எப்போது தொடக்கம்? வெளியான செய்தியால் ரசிகர்கள் குஷி!

ஃபேஷன் அழகியான மூதாட்டிக்கு ஹாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்!

SCROLL FOR NEXT