banana kesari Image credit - youtube.com
உணவு / சமையல்

சுலபமாக செய்யலாம் சுவையான வாழைப்பழ கேசரி!

நான்சி மலர்

வாழைப்பழம் எல்லோர் வீட்டிலும் சுலபமாக கிடைக்க கூடிய பழமாகும். இதை வைத்து சட்டுன்னு ஒரு ஸ்வீட் செய்து விடலாம். அதிக பொருட்கள் தேவைப்படாது. ஆனால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். அந்த ஸ்வீட் வேற எதுவுமில்லை, வாழைப்பழ கேசரிதாங்க. சரி வாங்க, வாழைப்பழ கேசரி எப்படி சட்டுன்னு ஈஸியா செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்-2

சக்கரை-1கப்.

ரவை-1/2 கப்.

முந்திரி-5

உலர்ந்த திராட்சை-5

குங்குமப்பூ- 2 சிட்டிகை.

நெய்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 4 தேக்கரண்டி நெய் ஊற்றி 5 முந்திரி, 5 உலர்ந்த திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே நெய்யில் ½ கப் ரவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஃபேனில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி மசித்த 2 வாழைப்பழத்தை நன்றாக வதக்கவும். 3 ½ கப் தண்ணீரை அதில் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இப்போது அதில் வறுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து நன்றாக வேகவிடவும். சூடான பாலில் 2 சிட்டிகை குங்குமப்பூவை கலந்து 1 மணிநேரம் வைத்து பிறகு இதில் சேர்த்துக் கொண்டு, இத்துடன் 1 கப் சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கின்டவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கின்டி இறக்கவும். அவ்வளவுதான், சுவையான வாழைப்பழ கேசரி தயார். வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து சட்டுன்னு செஞ்சிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT