இந்த அரையாண்டுத் தேர்வு விடுமுறையில், குழந்தை களுக்கு மிகவும் விருப்பமான கேக் வகைகளை செய்து அசத்துங்க. அத்துடன், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, முட்டையில்லா பிளம் கேக். அதை குக்கரிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம். முதலில் தேவையான பொருட்களைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
மிக்ஸ்டு ப்ரூட் ஜூஸ் - 1/4 கப்
உலர் திராட்சை - 1 மேசைக் கரண்டி
பேரிச்சை - 2 மேசைக் கரண்டிகள்
டூட்டி புரூட்டி - 4 மேசைக் கரண்டிகள்
செர்ரி - 7, 8 எண்ணிக்கைகள்
சர்க்கரை - 1/4 கப், 1 மேஜைக்கரண்டி
மைதா மாவு - 1 கப்
தண்ணீர் - 5 மேஜைக்கரண்டி, 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
பால் பவுடர் - 2 தேக்கரண்டி
ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
இஞ்சிப் பொடி - 1/4 தேக்கரண்டி
பட்டைப் பொடி - 1/4 தேக்கரண்டி
வெண்ணை/எண்ணை - 1/4 கப்
பால் - 1/2 கப்
எலுமிச்சை ஜூஸ்- 1 ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
மிக்ஸ்டு நட்ஸ் - 1/4 கப்.
செய்முறை;
1. 1/4 கப் மிக்ஸ்டு ப்ரூட் ஜூஸ், உலர் திராட்சை, டூட்டி புரூட்டி, பேரிச்சை, செர்ரி என இவை அனைத்தையும், 1 மணி நேரம் ஊற வைக்கவும்
2. மோர் தயாரிக்கவும். 1/2 கப் பாலுடன், 1 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் கலக்கவும்
3. கேரமல் சிரப்பு தயாரிக்கவும். ஒரு வாணலியில் 1 மேஜைக் கரண்டி சர்க்கரை, 1 ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.
சர்க்கரை அடுப்பு சூட்டில் கரைந்து, பழுப்பு நிறமாக மாறும். கேரமல் ஆன சர்க்கரையுடன், 5 மேஜைக் கரண்டி தண்ணீர் சேர்க்கவும். கேரமல் சிரப்பு தயார் ஆனவுடன், செய்முறை எண். 1ல் தயாரித்த உலர் பழங்கள், ஜூஸ் கலவையுடன் சேர்க்கவும். இத்துடன் 1/4 கப் சர்க்கரை சேர்க்கவும்.
4. செய்முறை எண். 3, கலவையுடன், 1 கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி பேகிங் பவுடர், 1/2 தேக்கரண்டி பேகிங் சோடா, 2 தேக்கரண்டி சோள மாவு, 2 தேக்கரண்டி பால் பொடி, 1/4 தேக்கரண்டி ஏலப்பொடி, 1/4 தேக்கரண்டி பட்டைப் பொடி, 1/4 தேக்கரண்டி இஞ்சிப் பொடி போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் செய்முறை எண். 2ல் தயார் செய்த மோரைக் கலக்கவும்.
5. மிக்ஸ்டு நட்ஸ் 1/4 கப் சேர்க்கவும்
6. 1/4 கப் வெண்ணை அல்லது எண்ணை சேர்க்கவும்
7. வெண்ணிலா எசன்ஸ் 1 தேக்கரண்டி சேர்க்கலாம்.
8. வட்டமான அல்லது சதுரமான அலுமினிய பாத்திரத்தில் வெண்ணை அல்லது எண்ணை நன்கு தடவி, சிறிது மைதா மாவைத் தூவி வைக்கவும். இது டஸ்ட் செய்தல் ( dusting) எனப்படும்.
9. டஸ்ட் செய்த பாத்திரத்தில், தயார் செய்த மாவினைக் கொட்டவும்.
10. குக்கரை ரப்பர், வெயிட் நீக்கி, மூடி வைத்து, மிதமான சூட்டில், 10 நிமிடங்கள் முன் சூடு (preheat) செய்யவும்.
11. குக்கரில் ஒரு ஸ்டாண்டு வைத்து, அதன் மீது கேக் பாத்திரத்தை வைக்கவும்.
12. கேக்கை 45-55 நிமிடங்கள் வேக விடவும். குக்கர் மூடியை 45 நிமிடங்கள் திறக்காமலிருப்பதன் மூலம், கேக் நன்கு வேகும். பஞ்சு போல சுவைக்கும்.
13. டூத் பிக் வைத்து குத்திப் பார்த்து, இன்னும் 5 அல்லது 10 நிமிடங்கள் கூடுதலாக வேக விடவும்
14. கேக் வெந்த பிறகு, பாத்திரத்தை குக்கரை விட்டு வெளியே வைக்கவும்
15. நன்கு ஆறிய பிறகு, பாத்திரத்தை கவிழ்த்து தட்டினால், கேக் பாத்திரத்தை விட்டு அழகாக பிரிந்து வரும்.
இந்த கிறிஸ்துமஸ் கேக்கை செய்து உங்கள் குழந்தை களுக்கு கொடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.