கொங்கு நாட்டு செலவு ரசம் www.youtube.com
உணவு / சமையல்

புளி இல்லாமல் கொங்கு நாட்டு செலவு ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா…?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கொங்கு நாட்டு ஸ்பெஷல் பாரம்பரியம் மிக்க ரசம் இது. சளி, இருமல், தொண்டை கட்டுக்கு இதனை பருக நல்ல பலன் கிடைக்கும். கொங்கு பகுதியில் பிரசவித்த பெண்களுக்கும், சளி இருமலுக்கும் இதனை கொடுப்பார்கள்.

இந்த ரசத்திற்கு தக்காளி, புளி இரண்டும் சேர்க்கத் தேவையில்லை.

மிளகு 2 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் 6

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

பூண்டு 10

மிளகாய் 2

தனியா தூள் 2 ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

கொத்தமல்லி சிறிது

தேங்காய் எண்ணெய் (அ)

நல்லெண்ணெய் 2 ஸ்பூன் தாளிக்க...

உப்பு தேவைக்கேற்ப...

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பூண்டு, தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியாக சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து நசுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்க மணக்க மணக்க ருசியான ரசம் தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சூப் போல் குடிக்கவும் செய்யலாம். அவ்வளவு ஆரோக்கியம் மிக்கது இந்த ரசம்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT