Thamarai thandu moor kulambu and senai kilangu vadai recipes Image Credits: Pinterest
உணவு / சமையல்

சுவையான தாமரைத் தண்டு மோர்க் குழம்பு-சேனைக்கிழங்கு வடை செய்யலாமா?

நான்சி மலர்

தாமரைத் தண்டில் அதிக நார்ச்சத்தும், குறைந்த கொழுப்பும் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இத்தகைய பயனுள்ள தாமரை தண்டை வைத்து எளிமையான ரெசிபி செய்யலாம் வாங்க.

தாமரை தண்டு மோர்க் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.

தாமரை தண்டு-2

மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி.

கரம் மசாலா- ½ தேக்கரண்டி.

அரிசி மாவு-1 தேக்கரண்டி.

சோளமாவு-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

மசாலா பேஸ்ட் செய்வதற்கு,

அரிசி -1 தேக்கரண்டி.

துவரம்பருப்பு-1 தேக்கரண்டி.

தேங்காய்-1/2 கப்.

பச்சை மிளகாய்-1

இஞ்சி-1 துண்டு.

பெருங்காயத்தூள்- சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

மஞ்சள் தூள்- சிறிதளவு.

குழம்பு செய்வதற்கு,

கடுகு-1/2 தேக்கரண்டி.

ஜீரகம்-1/2 தேக்கரண்டி.

உளுந்து-1/2 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை- சிறிதளவு.

தயிர்-1கப்.

கொத்தமல்லி- சிறிதளவு.

தாமரை தண்டு மோர்க் குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் தாமரைத் தண்டை 2 எடுத்து தோல் சீவி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொண்டு அதை ஒரு ஃபேனில் தண்ணீர் 1 டம்ளர் சேர்த்து உப்பு சிறிது சேர்த்து வெட்டிய தாமரை தண்டை அதில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் தாமரைத் தண்டு, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி, கரம் மசாலா ½ தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து விட்டு அத்துடன் அரிசி மாவு 1 தேக்கரண்டி, சோளமாவு 1 தேக்கரண்டி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எண்ணெய்யை நன்றாக கொதிக்க விட்டு அதில் தாமரைத் தண்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் அரிசி 1 தேக்கரண்டி, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாய் 1,  இஞ்சி 1துண்டு, பெருங்காயத்தூள் சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, தேங்காய் ½ கப், உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி அதில் கடுகு ½ தேக்கரண்டி, ஜீரகம் ½ தேக்கரண்டி, உளுந்து ½ தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக கிண்டிய பிறகு அதில் செய்து வைத்திருக்கும் பேஸ்டை சேர்க்கவும். இப்போது அதில் 1 கப் தயிரை சேர்த்து கிண்டவும். கடைசியாக பொரித்து வைத்த தாமரை தண்டை சேர்த்து கிண்டி இறக்கவும். கடைசியாக குழம்பின் மீது சிறிது கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுலபமான தாமரை தண்டு மோர்க் குழம்பு தயார்.  நீங்களும் வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

சேனைக்கிழங்கு வடை செய்ய தேவையான பொருட்கள்.

சேனைக்கிழங்கு-1

காய்ந்த மிளகாய்-5

பூண்டு-5

உப்பு- தேவையான அளவு.

அரிசி மாவு-2 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

சேனைக்கிழங்கு வடை செய்முறை விளக்கம்.

முதலில் தோல் நீக்கிவிட்டு சேனைக்கிழங்கை நன்றாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் காய்ந்த மிளகாய் 5, பூண்டு 5 சேர்த்து அரைத்து விட்டு அத்துடன் துருவி வைத்த சேனைக்கிழங்கையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது இதற்கு தேவையான உப்பு, அரிசி மாவு 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்து குட்டி குட்டியாக வடையை தட்டி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான். சுவையான சேனைக்கிழங்கு வடை தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT