Let's make delicious Javvarisi Carrot Idli with Pumpkin Tamarind Pachadi! Image Credits: YouTube
உணவு / சமையல்

டேஸ்டியான ஜவ்வரிசி கேரட் இட்லி வித் பூசணி புளி பச்சடி செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றைக்கு மிருதுவான ஜவ்வரிசி கேரட் இட்லி மற்றும் சுவையான பூசணி புளி பச்சடி வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்று பார்ப்போம்.

ஜவ்வரிசி கேரட் இட்லி செய்ய தேவையான பொருட்கள்.

ஜவ்வரிசி-1 கப்.

ரவை-1 கப்.

தயிர்-1 கப்.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

மிளகு சிறிதளவு.

பச்சை மிளகாய்-1

வெங்காயம்-1

கருவேப்பிலை-சிறிதளவு.

கேரட்-1கப்.

பேக்கிங் சோடா-1 சிட்டிகை.

ஜவ்வரிசி கேரட் இட்லி செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பத்திரத்தில் ஜவ்வரிசி 1 கப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.  இப்போது அதில் 1 கப் ரவை, தயிர் 1 கப், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

இப்போது கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பொரிந்த பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, மிளகு சிறிதளவு சேர்த்து செய்து வைத்திருக்கும் மாவில் கலந்துவிட்டு இப்போது துருவிய கேரட் 1கப், பேக்கிங் சோடா 1 சிட்டிகை சேர்த்து கலந்துவிட்டு இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான ஜவ்வரிசி கேரட் இட்லி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பூசணி புளி பச்சடி செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வெந்தயம்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

பூசணி-1கப்.

வெண்டைக்காய்-1 கப்.

தக்காளி-1

புளி தண்ணீர்-1 கப்.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

மிக்க்ஸியில் அரைக்க,

தேங்காய்-1 கப்.

பச்சை மிளகாய்-3

கடுகு-1 தேக்கரண்டி

பூசணி புளி பச்சடி செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு அதில் கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரிந்த பிறகு அதில் நறுக்கிய பூசணி 1 கப், வெண்டை 1கப், நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி, கரைத்து வைத்த புளி தண்ணீர் 1கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது மிக்ஸியில் தேங்காய் 1 கப், கடுகு 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 3 சேர்த்து நன்றாக அரைத்து அதையும் இத்துடன் கலந்துவிட்டு 10 நிமிடம் கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான பூசணி புளி பச்சடி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT