Delicious seralam- Makkan Beda  Image Credits: YouTube
உணவு / சமையல்

சுவையான சீராளம்- மக்கன் பேடா செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றைக்கு நம்முடைய பாரம்பரிய உணவான சீராளம் மற்றும் மக்கன் பேடா ரெசிபிஸ் எப்படி சிம்பிளாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்ப்போம்.

சீராளம் செய்ய தேவையான பொருட்கள்.

இட்லி அரைக்க,

துவரம் பருப்பு-1 கப்.

பாசிப்பருப்பு-1 கப்.

கடலைப்பருப்பு-1 கப்.

பச்சரிசி-1 கப்.

உளுந்து-1 கப்.

வரமிளகாய்-4

சீரகம்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

இஞ்சி-1 துண்டு.

தாளிக்க,

எண்ணெய்- தேவையான அளவு.

கடுகு-1 தேக்கண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1

மஞ்சள் தூள்-1/4தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

துருவிய தேங்காய்- சிறிதளவு.

சீராளம் செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் துவரம் பருப்பு 1 கப், பாசிப்பருப்பு 1 கப், கடலைப்பருப்பு 1 கப், பச்சரிசி 1 கப், உளுந்து 1கப் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

இப்போது ஊறவைத்த பருப்பை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் வரமிளகாய் 4, சீரகம் 1 தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு, உப்பு தேவையான அளவு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

இப்போது இட்லியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் ஃபேனை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வெட்டி வைத்திருக்கும் இட்லியை இத்துடன் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு, துருவிய தேங்காய் சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவு தான். சுவையான சீராளம் தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

மக்கன் பேடா செய்ய தேவையான பொருட்கள்.

மைதா-1கப்.

இனிப்பில்லாத கோவா-1கப்.

பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.

வெண்ணெய்-1 தேக்கரண்டி.

பாதாம்-5

பிஸ்தா-5

ஆப்ரிக்காட்-5

முந்திரி-5

பூசணி விதை-சிறிதளவு.

பாகு செய்ய,

சர்க்கரை-2கப்.

தண்ணீர்-2 கப்.

குங்குமப்பூ-சிறிதளவு.

ஏலக்காய் பொடி-சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

மக்கன் பேடா செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் மைதா 1கப், இனிப்பில்லாத இல்லாத கோவா 1கப், தயிர் 1கப், வெண்ணெய் 1 தேக்கரண்டி, பேக்கிங் சோடா ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பாதாம் 5, பிஸ்தா 5, முந்திரி 5, ஆப்ரிகாட் 5, பூசணி விதை சிறிதளவு ஆகியவற்றை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது மாவை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் வெட்டி வைத்திருக்கும் நட்ஸை உள்ளே வைத்து மூடிவிடவும்.

அடுப்பில் ஃபேனை வைத்து  சர்க்கரை 2 கப், தண்ணீர் 2 கப், குங்குமப்பூ சிறிதளவு, ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை வைத்து இறக்கி வைத்து விடவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய்விட்டு அது நன்றாக காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் மாவை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது பொரித்து எடுத்த மக்கன் பேடாவை சர்க்கரை பாகில் 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் நல்ல சுவையான மக்கன் பேடா தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT