Let's make Diwali Special Carrot Kesari- Watermelon Halwa! Image Credits: YouTube
உணவு / சமையல்

தீபாவளி ஸ்பெஷல் கேரட் கேசரி- வாட்டர் மெலன் அல்வா செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றைக்கு தீபாவளி ஸ்பெஷலாக சிம்பிளாக செய்யக்கூடிய இனிப்பு ரெசிபிஸை பற்றிப் பார்க்கலாம். சுவையான கேரட் கேசரி மற்றும் வாட்டர் மெலன் அல்வா ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

கேரட் கேசரி செய்ய தேவையான பொருட்கள்.

நெய்- தேவையான அளவு.

ரவை-1 கப்.

முந்திரி-10

கேரட்-2

சர்க்கரை-1 ½ கப்.

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

கேரட் கேசரி செய்முறை விளக்கம்;

முதலில் கடாயில் 4 தேக்கரண்டி நெய்விட்டு ரவை 1 கப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது நெய் 4 தேக்கரண்டி விட்டு 10 முந்திரியை பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது 2 கேரட்டை சின்னதாக வெட்டி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்டாக எடுத்துக் கொள்ளவும். கடாயில் மீதமிருக்கும் நெய்யில் நன்றாக கேரட்டை சேர்த்து வதக்கவும். வறுத்து வைத்திருக்கும் ரவையை இத்தோடு சேர்த்து 2 நிமிடம் கலந்துவிட்டு 3 கப் சுடுத்தண்ணீரை சேர்த்து கலந்து வேக விடவும். நன்றாக ரவைவெந்ததும் 1 ½ கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிண்டவும்.

கடைசியாக, வாசனைக்கு 1 தேக்கரண்டி ஏலக்காய்பொடி சேர்த்துவிட்டு வறுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து கிண்டி இறக்கவும். சுவையான கேரட் கேசரி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வாட்டர் மெலன் அல்வா செய்ய தேவையான பொருட்கள்;

தர்பூசணி தோல்-2 கப்.

சர்க்கரை-1 கப்.

முந்திரி-10.

நெய்-தேவையான அளவு.

உப்பு-1 சிட்டிகை.

வாட்டர் மெலன் அல்வா செய்முறை விளக்கம்.

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு அதனுடைய தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். அதில்தான் இன்று அல்வா செய்ய போகிறோம். முதலில் தர்பூசணியின் தோலை நன்றாக துருவி 2 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். இப்போது அதில் இருக்கும் தண்ணீரை நன்றாக பிழிந்து தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் ஃபேனை வைத்து 2 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி 10 சேர்த்து வறுத்துவிட்டு அத்துடன் துருவி வைத்திருக்கும் தர்பூசணி தோலை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அதில் சிறிது தண்ணீர் விட்டு கிண்டிவிடவும். இதில் 1 சிட்டிகை உப்பு, 1 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். கடைசியாக 1 தேக்கரண்டி சேர்த்து கிளறவும் அல்வா பதம் வந்ததும் இறக்கிவிடவும். டேஸ்டியான வாட்டர் மெலன் அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT