salem thattuvadai... Image credit - youtube.com
உணவு / சமையல்

சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் - வடை மோர் குழம்பு செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்னைக்கு சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் மற்றும் வடை மோர்க்குழம்பு ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

தட்டுவடை செட் செய்ய தேவையான பொருட்கள்;

சாலட் செய்வதற்கு,

வெங்காயம்-1கப்.

கேரட்-1கப்.

மாங்காய்-1கப்.

பீட்ரூட்-1கப்

கொத்தமல்லி-சிறிதளவு.

எழுமிச்சை சாறு-சிறிதளவு.

சாட் மசாலா-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

தட்டுவடை செய்வதற்கு,

அரிசி மாவு-1கப்.

உளுந்துமாவு-1 தேக்கரண்டி.

மிளகாய்த்தூள்-1தேக்கரண்டி.

கடலைப்பருப்பு- சிறிதளவு.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

சூடான எண்ணெய்- சிறிதளவு.

பச்சை சட்னி செய்வதற்கு,

கொத்தமல்லி-சிறிதளவு.

புதினா- சிறிதளவு.

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-1

உப்பு-தேவையான அளவு.

எழுமிச்சை சாறு-சிறிதளவு.

சிகப்பு சட்னி செய்வதற்கு,

வெங்காயம்-1

தக்காளி-1

வரமிளகாய்-3

பூண்டு-2

எண்ணெய்-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

தட்டுவடை செட் செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பவுலில் நன்றாக துருவிய வெங்காயம் 1கப், துருவிய பீட்ரூட் 1 கப், துருவிய மாங்காய் 1 கப், துருவிய கேரட் 1கப்,கொத்தமல்லி சிறிதளவு, உப்பு தேவையான அளவு, சாட் மசாலா 1 தேக்கரண்டி, எழுமிச்சை சாறு சிறிது பிழிந்துவிட்டு நன்றாக அனைத்தையும் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தட்டைசெய்வதற்கு, ஒரு பவுலில் அரிசிமாவு 1கப், உளுந்து மாவு 1 தேக்கரண்டி சேர்த்து சலித்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஊறவைத்த கடலைப்பருப்பு சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, மிளகாய் தூள் 1தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையானஅளவு சேர்த்து சூடான எண்ணெய் சிறிதுவிட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது சிறிது மாவை எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து இலையை மூடி மேலே ஒரு அழுத்தம் கொடுத்தால் மாவு நன்றாக தட்டையாகிவிடும். இதை நன்றாக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு இருபக்கமும் திருப்பிவிட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் தட்டையும் தயார்.

பச்சை சட்னிக்கு,

முதலில் மிக்ஸியில் கொத்தமல்லி சிறிதளவு, புதினா சிறிதளவு, இஞ்சி 1துண்டு, பச்சை மிளகாய் 1, உப்பு தேவையான அளவு, எழுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

சிவப்பு சட்னிக்கு,

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு 2, வரமிளகாய் 3, வெங்காயம் 1, தக்காளி 1 உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கி இதையும் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு தட்டில் தட்டையை வைத்து அதன் மீது சிகப்பு சட்னி வைத்து அதன் மீது செய்து வைத்த சாலட் வைத்து அதன் மீது பச்சை சட்னி வைத்து இன்னொரு தட்டையை வைத்து மூடிவிடவும். அவ்வளவுதான். சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

வடை மோர்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்;

கடலைப்பருப்பு-1கப்.

இஞ்சி-1துண்டு.

கருவேப்பிலை-சிறிதளவு.

வரமிளகாய்-4

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

வெந்தயம்-1தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

தேங்காய்-1கப்.

இஞ்சி-1துண்டு.

பச்சை மிளகாய்-4

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

தயிர்-2கப்.

வடை மோர்குழம்பு செய்முறை விளக்கம்;

முதலில் மிக்ஸியில் ஊறவைத்த கடலைப்பருப்பு 1கப்பை சேர்த்து அத்துடன் 1 துண்டு இஞ்சி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வரமிளகாய் 4, பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து சிறுசிறு வடையாக தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.

இப்போது மிக்ஸியில் தேங்காய் 1கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 4 சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதையும் கடாயில் சேர்த்துக்கொள்ளவும்.

மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியான தயிர் 2கப் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி நன்றாக கிண்டிவிட்ட பின் செய்து வைத்திருக்கும் வடையை அதில் சேர்க்கவும். அவ்வளவு தான். சுவையான வடை மோர் குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT