Mushroom Gravy Recipe.
Mushroom Gravy Recipe. 
உணவு / சமையல்

ப்பா! செம டேஸ்ட்.. காளான் கிரேவி!

கிரி கணபதி

காளான் உணவுகளை பெரும்பாலானவர்கள் வீட்டில் வாங்கி சமைப்பதில்லை. அப்படியே சமைத்தாலும் ஒரே மாதிரிதான் செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை இந்த பதிவில் நான் சொல்லப்போவது போல காளான் கிரேவி செய்து சாப்பிட்டுப் பாருங்கள். சுவை வேற லெவலில் இருக்கும். சப்பாத்திக்கு இந்த காளான் கிரேவி நல்ல காம்பினேஷன்.

தேவையான பொருட்கள்

காளான் - ¼ கிலோ 

பட்டை - 1

ஏலக்காய் - 2

வெங்காயம் - 1 நறுக்கியது

கரம் மசாலா - 1 ஸ்பூன் 

மல்லி தூள் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

சீரகத்தூள் - ½ ஸ்பூன் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தக்காளி - 1 நறுக்கியது

பச்சை மிளகாய் - 2 

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளித்து, அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், மல்லித்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கிளற வேண்டும். பின்பு இதில் பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து மென்மையாக வேகும்வரை வதக்கவும். 

தக்காளி வெந்ததும் காளானை சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு வரும் வரை வேகவைத்து இறுதியில் இறக்கும்போது, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கினால் செம டேஸ்டான காளான் கிரேவி ரெடி. 

இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாகவும், அதே நேரம் சுவையும் நன்றாக இருக்கும். 

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT