Gandharappam food image 
உணவு / சமையல்

நைவேத்யம்: முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான கந்தரப்பம் செய்வது எப்படி?

மாலதி சந்திரசேகரன்

ப்பம் என்ன சாதாரண விஷயம்தானே என்று நினைத்துக்கொள்ளலாம். ஆனால், கந்தரப்பம் என்கிற இந்த வெள்ளைப் பண்டமானது முருகனுக்கு மிகவும் பிடித்தமானதாகக் கூறப்படுகிறது. கந்த சஷ்டி திருவிழாவின்பொழுது,  அதாவது சூரசம்ஹாரத்தன்று இந்த கந்தர் அப்பத்தைச் செய்து முருகனுக்கு நைவேத்தியம் செய்தால் மனோ பீஷ்டங்கள் பூர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.  இனி  இதைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள்,  செய்முறை பற்றி காண்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி, பொடித்த வெல்லம்  -  தலா ஒரு கப், உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்,  கடலைப்பருப்பு  - 2 டேபிள் ஸ்பூன், பயத்தம் பருப்பு -  1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் -  ¼  கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை,  ஏலப்பொடி -  சிறிதளவு, பொரிக்க எண்ணெய்.

செய்முறை:

அரிசி, பருப்புக்களை, இரண்டு  மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாக மைய அரைக்கவும்.

அரைக்கும்பொழுது தண்ணீரை தெளித்துத் தெளித்து அரைக்கவும். அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

நன்றாக அரைத்த பின்பு துருவிய தேங்காயை அத்துடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 

மாவானது வெல்லம் சேர்த்தவுடன் சிறிது நீர்த்துக்கொள்ளும். மாவானது இட்லி மாவு பதத்தில் இருப்பது சரியாக இருக்கும்.

சமையல் சோடா,  ஏலத்தூள் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி, மிதமான தீயில் வைக்கவும். பொதுவாக வெல்லத்தால் செய்யப்படும் எந்த பண்டத்தையும் மிதமான தீயில் வைத்துதான் பொரிக்க வேண்டும்.

எண்ணெய்  காய்ந்தவுடன், சின்ன குழி கரண்டியில் ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

ஊற்றியவுடன் உடனே திருப்பி விட வேண்டாம்.  அது நன்றாக மேலே எழும்பி வரும். அப்பொழுது பக்கவாட்டில் இருக்கும் எண்ணெய்யை எழும்பிய அப்பத்தின் மேல் விடவும்.

வெந்த பின்பு திருப்பி விடவும். 

ஓரக்கால்கள் நன்றாக சிவந்து, கரகரப்பானவுடன் அப்பத்தை வெளியே எடுக்கவும்.

இரண்டாம் முறை:

முருகருக்கு தேனும் தினைமாவும் மிகவும் பிடித்தம் என்பதால் ஒரு கப் பச்சரிசிக்கு பதிலாக அரை கப் பச்சரிசி, அரை கப் தினை எடுத்து ஊறவைத்து, ஊறவைத்த மற்ற பருப்புக்களுடன் சேர்த்து அரைக்கவும். முக்கால் கப்பு வெல்லத்தைச் சேர்த்து அரைத்து, கால் பங்கு தேனை கலந்தும் குழிப்பணியாரச் சட்டியில் விட்டு அப்பம் செய்யலாம். இந்த மாவை நேரிடையாக எண்ணெய்யில் ஊற்றிச் செய்தால், அலண்டு போகும். சரியாக வராது.

திருச்செந்தூர் திருபாகம்...

திருபாகம்

இந்த திருபாகம் என்னும் இனிப்பை சூரசம்ஹாரத்தன்று திருச்செந்தூரில் பல வீடுகளில் சமைத்து, முருகளுக்கு நைவேத்யம் செய்து வழிபடுவது வழக்கம்.

தேவையான பொருட்கள்:

1. கடலை மாவு, நெய் ,  பொடித்த முந்திரிப் பருப்பு------தலா 1  கப் .

2. சர்க்கரை, பால்----   தலா 2 கப்

3. ஏலப்பொடி,  குங்குமப்பூ---- சிறிதளவு.

கடலை மாவை  நிறம் மாறாமல் வாசனை போக வறுத்து, ஆறவைத்து, சலித்துக் கொள்ளவும். பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டி இல்லாமல், கடலை மாவை நன்றாகக் கரைத்துக் கொள்ளவும் .அடுப்பில் ஏற்றி மிதமான சூட்டில் கிளறவும்.  சேர்ந்து வரும் பொழுது சர்க்கரையைக் கொட்டவும். மீண்டும் கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டிப்படும் சமயத்தில் பொடித்த முந்திரிப் பருப்பைச் சேர்த்து நன்கு கலந்து மீண்டும் கிளறவும். சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை கரைத்து ஊற்றவும். ஏலப்பொடியைச் சேர்க்கவும் .பந்து போல் நன்கு அல்வா பதத்தில் சேர்ந்து வரும். திருபாகம் ரெடியாகிவிட்டது. கந்த பெருமானுக்கு படைக்க வேண்டியது தான்.

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

SCROLL FOR NEXT