Sandwich types 
உணவு / சமையல்

சத்தான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிஸ் - சாண்ட்விச் வகைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

குறுகிய நேரத்தில் ஒரு சத்தான உணவை செய்ய வேண்டும் என்றால் பலருடைய சாய்ஸ் சாண்ட்விச்சாகத்தான் இருக்கும். சமைக்கத் தெரியாதவர்கள் கூட எந்தவித சிரமமும் இன்றி பிரட் சாண்ட்விச்களை செய்து விடலாம். இது சிறந்த ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

ராஜ்மா சீஸ் சாண்ட்விச்:

ராஜ்மா 100 கிராம் 

உருளைக்கிழங்கு பெரிது 1 வெங்காயம் 1 

பச்சை மிளகாய் 2 

இஞ்சி 1 துண்டு 

பூண்டு 2 பற்கள் 

மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் 

கரம் மசாலா 1ஸ்பூன் 

சீரகத்தூள் 1/2 ஸ்பூன் 

கொத்தமல்லி தழை சிறிது

உப்பு தேவையானது

பிரட் துண்டுகள்

ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து குக்கரில் வேகவிட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு போன்றவை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து அத்துடன் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சீரகத்தூள் தேவையான உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதங்கியதும் கொரகொரப்பாக அரைத்த மசாலாக்களை சேர்த்து, அத்துடன் மசித்து வைத்துள்ள ராஜ்மா உருளைக்கிழங்கையும் போட்டு கால் கப் தண்ணீர் விட்டு நன்கு கிளறி எடுக்கவும். அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க பிரெட்டுக்குள் ஸ்டப்பிங் செய்ய தேவையான மசாலா தயார்.

பிரெட்டை வெண்ணெய் தடவி அதற்குள் ராஜ்மா கலவையை வைத்து அதன் மீது சிறிதளவு சீஸ் தூவி மற்றொரு பிரெட்டை வைத்து மூடி சாண்ட்விச் டோஸ்டரில் வைத்து இருபுறமும் சிவந்ததும் சிறிதளவு வெண்ணெய் தடவி பரிமாற ஜோரான ராஜ்மா சீஸ் சாண்ட்விச் தயார்.

ஸ்வீட் கார்ன் சீஸ் பிரெட் சாண்ட்விச்:

ஸ்வீட் கார்ன் ஒரு கப் 

உப்பு தேவையானது 

மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் 1/4 ஸ்பூன்

சீஸ் தேவையான அளவு

வெண்ணை சிறிது

கார்னுடன் சிறிது உப்பு கலந்து வேகவைத்து எடுக்கவும். அத்துடன் சிறிதளவு வெண்ணெய், மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து வைக்கவும்.

பிரெட்டில் வெண்ணை தடவி தேவையான அளவு சீஸ் துருவி சேர்த்து அதன் மேல் கார்ன் கலவையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி சாண்ட்விச் மேக்கரில் 2 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். சுவையான கார்ன் சீஸ்  பிரெட் சாண்ட்விச் தயார்.

நெகடிவ்க்குள் இருக்கும் பாஸிடிவை கண்டுகொண்டால் வெற்றிதான்!

பெங்களூரு விதான சௌதா - அரங்கம் உருவான விவரம் தெரியுமா?

உங்களை நீங்களே நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!

மாற்ற முயற்சிப்பதை விட ஏற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தரும் - எதில்? எங்கே? எப்போது?

வாழ்வில் ஒருவரை உயர்ந்த மனிதராக மாற்றும் 7 பழக்க வழக்கங்கள்!

SCROLL FOR NEXT