ஆரஞ்சு ரசம்
ஆரஞ்சு ரசம் 
உணவு / சமையல்

ஆரஞ்சு ரசம்!

இளவரசி வெற்றி வேந்தன்

தேவையான பொருட்கள்:

  • 1/2 கப் - ஆரஞ்சு சாறு

  • 4 -நடுத்தரமான தக்காளி

  • நெல்லி அளவு -புளி

  • 1 சிட்டிகை - பெருங்காயம்

  • சிறிதளவு -கருவேப்பிலை, மல்லி

  • தேவையான அளவு -எண்ணெய் தேவையான அளவு - உப்பு

  • 1/4 டீஸ்பூன் - கடுகு

  • 2 - வற்றல்

வறுத்து பொடிக்க:

1.மிளகு - 1 டீஸ்பூன்

2.சீரகம் - 1 டீஸ்பூன்

3.பூண்டு - 5 பல்

4.கடலைபருப்பு - 1/2 டீஸ்பூன்

5.மல்லி - 1/4 டீஸ்பூன்

6.வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.

2.வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

3.புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி 3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.

4.வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.

5.பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.

6.பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

7.மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர் ,ஆரஞ்சு சாறு சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.

8.ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள் ,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT