poosani morkuzhambu
poosani morkuzhambu 
உணவு / சமையல்

வெண் பூசணியின் நன்மைகள்: வெண் பூசணி மோர் குழம்பு!

கல்கி டெஸ்க்

பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்க வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

பூசணிக்காய் மோர் குழம்பு:

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 1/4 கிலோ

தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

சீரகம் - 1 ஸ்பூன்

கடலைபருப்பு - 1 ஸ்பூன்

அரிசி - 1 ஸ்பூன்

மோர் - 2 கப்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

மல்லிதழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

பெருங்காயம் - சிட்டிகை

மோர்மிளகாய் - 2

செய்முறை:

1. கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும்.

2. தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் நன்றாக அரைத்து கொள்ளவும்.

3.பூசணிக்காயை வேகவைத்து கொள்ளவும்.

4. பின் மோரில் பூசணிக்காய், அரைத்த மசாலா,மஞ்சள்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து தயார் செய்து வைக்கவும்.

5. வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, மோர்மிளகாய்,தாளித்து மோர்கரைசலை அதில் சேர்க்கவும்.

6. நன்கு நுரை கூடியதும் மல்லிதழை தூவி இறக்கவும்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT